அஜித் படத்துக்காக அனுஷ்காவா மாறும் திரிஷா!. ஐயோ பாவம்!.. இதெல்லாம் தேவையா?!.

Published on: October 27, 2023
trisha
---Advertisement---

Actress Thrisha: த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழை தவிர தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் என்ன நடந்தது.. பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்… ப்ரின்ஸ் நிலைமை படுமோசம்..!

இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த திர்ஷா இதுவரையிலும் திருமணமே செய்யாமால் இருந்து வருகிறார். இதற்கு பலவித காரணங்களும் சொல்லப்படுகிறது. த்ரிஷா சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முன்னரே திருப்பாச்சி, கில்லி போன்ற திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்படங்கள் அனைத்தும் இவர்களுக்கு வெற்றிப்படமாக அமைந்தன. திரிஷாவுடன் நடித்தால் அப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என விஜய்யே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இவர்கள் நடித்த லியோ திரைப்படம் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

இதையும் வாசிங்க:விஜய்க்கு வில்லனா நடிச்சாச்சு! அடுத்து யாரு? அவர்தான் – சூப்பரான அப்டேட்டை கொடுத்த நடிப்பு அரக்கன்

இப்படத்திற்கு பின் த்ரிஷா அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படபிடிப்புகள் அஸர்பெய்ஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்குமார் இருவேடங்களில் நடிக்க உள்ளார். சற்று வயதானவராக ஒரு அஜித்தும் இளமையான ஒரு அஜித் என இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

வயதான அஜித்துக்கு த்ரிஷா ஜோடியாகவும் இளமையான அஜித்துக்கு ரெஜினா கெசேந்திரா ஜோடியாகவும் நடிக்கவுள்ளனர். தற்போது இயக்குனர் த்ரிஷாவிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். அதன்படி த்ரிஷா வயதான அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதால் அவரது உடல் எடையை குறைக்க சொல்லியிருக்கிறாராம். ஏற்கனவே த்ரிஷா அப்படிதான் இருக்கும் நிலையில் தற்போது போட்ட இந்த கண்டிஷன் நெட்டிசன்களை சிரிக்க வைக்கிறது.

மேலும், ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டி குண்டாக மாறி நடித்த அனுஷ்கா இப்போதுவரை உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். திரிஷா அந்த லிஸ்ட்டில் சேராமல் இருந்தால் சந்தோஷம்.

இதையும் வாசிங்க:அடுத்த சம்பவத்துக்கு ரெடி… தளபதி69 படத்தினை இயக்க இருப்பது இந்த இயக்குனர் தானா..!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.