சரியான கல்நெஞ்சக்காரரா இருப்பாரோ?.. கர்ணன் படத்தில் நட்டியை வச்சு செஞ்ச மாரி செல்வராஜ்!..
கர்ணன் திரைப்படத்தில் நட்டி நடராஜனை ஒரு நாள் முழுவதும் வெயிலில் அமர வைத்து டார்ச்சர் செய்து இருக்கின்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தின் மூலமாக இந்தியாவைத் தாண்டி சர்வதேச அரங்கிலும் கவனத்தை பெற்றார்.
இதையும் படிங்க: அஜீத்தின் சம்பளத்தை தாண்டிய அட்லீ!.. அடுத்த படத்துக்கு இவ்வளவு கோடியா?!….
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய மாரி செல்வராஜ் இரண்டாவது திரைப்படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் காம்போவில் உருவான திரைப்படம் தான் கர்ணன். இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த அனைத்து பிரபலங்களும் மிகச்சிறந்த பாராட்டை கொடுத்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு இணையாக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் நட்டி நட்ராஜ். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த நடராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். கர்ணன் திரைப்படத்தில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார் .
'முதல் நாளில் கர்ணன் படத்திற்காக நடிக்க செல்லும் போது மாரி செல்வராஜ் தூரத்தில் ஒரு பாறையை காட்டி அதில் சென்று உட்காருமாறு என்னை கூறினார். அங்கு ஒரு நாற்காலியை போட்டு என்னை அமர வைத்ததுடன் தண்ணீர், புத்தகங்கள், செய்திதாள்கள் என அனைத்தையுமே தனக்கு கொடுத்தார்கள்.
அப்போது எனது அசிஸ்டன்ட்டை குடை பிடிக்க வேண்டாம் என்று மாறி செல்வராஜ் கூறிவிட்டார். வெயிலை உடம்பில் வாங்கிக் கொள்ளும்படி கூறினார். காலை 10 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை அதே வெயிலில் நான் அமர்ந்திருந்தேன். ஒரு காட்சி கூட சூட்டிங் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே அளவிற்கு உணவு, இளநீர் என அனைத்தும் வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் கமல் சாரை விட பெஸ்ட்!.. இப்படி சொல்லிட்டாரே மிர்ச்சி சிவா!..
ஷூட்டிங்-க்கு முன்பாக எனது கெட்டப் எதையும் மாற்ற வேண்டாம் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். பின்னர் அவர் சொன்ன கெட்டப்பில் சூட்டிங் ஸ்பாட் போய் நின்றதும் உள்ளூர் போலீசார் வந்திருப்பதாக அனைவரும் நினைத்து விட்டார்களாம். அங்கு யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு தனது கெட்டப்பை மாற்றினார் மாரி செல்வராஜ்' என்று நட்ராஜ் பேசியிருக்கின்றார்.