துப்பாக்கியோடு ஓடுபவன், முறைத்து பார்க்கும் பெண்… மிஷ்கினின் ஒரு நாள்!
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குநர் மிஷ்கின்.

தமிழ் சினிமாவில் சிறந்த 10 த்ரில்லர் படங்கள் என்று லிஸ்ட் போட்டால், அதில் மிஷ்கினின் படமும் இருந்தே ஆகும். அவர் இயக்கியதில் சில படங்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகும் நிச்சயம் பேசப்படும் படைப்பாக தான் இருக்கிறது.
‘சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என எந்தவொரு படத்தை எடுத்தாலும், அவருடைய பாணியில் அதை வித்தியாசமாக காட்சியமைத்து ரசிகர்களுக்கு திரை விருந்து கொடுப்பார்.
சமீபத்தில், இயக்குநர் மிஷ்கின் கொடுத்த பேட்டியில் “நான் காலைல எழுந்திருச்சதும் ஒரு ரெண்டு மணி நேரம் புத்தகங்கள் படிப்பேன். மினிமம் ரெண்டு மணி நேரம் மியூசிக் கேட்டு ரசிப்பேன்.
மெயின்னா வெஸ்டர்ன் கிளாசிக்கல் தான் கேட்பேன். அப்புறம் நைட்டு ஒரு நான்கு மணி நேரம் புத்தகங்கள் படிப்பேன். நடுவுல சாப்பிடுறது. படம் பார்க்க ஆரம்பிச்சா, 24 மணி நேரமும் படம் தான் பார்ப்பேன்.

நிறைய இமேஜஸ் மைண்ட்ல தோணும். தூங்கும்போது கூட ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு ஓடி வர மாதிரி ஒரு இமேஜ் தோணும். திரும்பி பார்த்தா ஒரு கால் தெரியுற மாதிரி இமேஜ். சாப்பிடும் போது கூட ஒரு பொண்ணு முறைச்சு பாக்குற மாதிரிலாம் இமேஜ் தோணும்.
நான் அந்த எல்லா இமேஜஸ் பத்தியும் எழுதி வச்சுட்டே இருப்பேன். அப்புறம் நைட் என்னோட மகள் கூட போன்ல பேசுவேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவ அவ பேசுவா. இப்படி தான் ஷூட்டிங் இல்லாத நேரங்களில், என்னோட ஒரு நாள் இப்படி தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.








