தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி நடித்து, பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘பத்தா’ அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் ஆகிறது.
ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் தான் நடித்திருக்கிறார். அக்டோபரில் ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகப் போகிறது என்ற குஷியில் இருந்த விஜய் சேதுபதிக்கு அடுத்த ஹேப்பி நியூஸ் வந்திருக்கிறது.
ஆம்.. இவர் நடித்துள்ள ‘ட்ரெயின்’ படத்தின் ரிலீஸ் தேதியும் குறிச்சாச்சு. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறதாம்.







