Cinema History
எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..
சிறு வயதிலேயே நாடகங்களில் நுழைந்தவர் எம்.ஆர்.ராதா. அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி நாடக கம்பெனியில் தன்னை இணைத்துக்கொண்டார். 12 வயது முதல் பல வருடங்கள் நாடகங்களில் நடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி என பலரும் அப்போது நாடகங்களில் நடித்து வந்தனர்.
சினிமாவில் வாய்ப்புகளை பெற்று படிப்படியாக நடித்து முன்னேறியவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். பெரியாரின் திராவிட கொள்கையை தனது நாடகங்களில் பிரதிபலித்தவர் இவர். இதற்காக பல எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால், எப்போதும் யாருக்காகவும் அவர் பின்வாங்கியது இல்லை.
இதையும் படிங்க: கோபத்தில் எம்.ஆர்.ராதாவை பழிவாங்கிய இயக்குனர்!.. ஒன்றரை வருடம் படுக்கையில் கிடந்த நடிகவேள்..
பல சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். சுயமரியாதை உணர்வு அதிகமாக கொண்டவர். தன்னை மட்டம் தட்டுவது போல் யார் நடந்துகொண்டாலும் பொறுத்துக்கொள்ளமாட்டார். அதிகமாக கோபப்படுவார். அதனால்தான் எம்.ஜி.ஆரை சுடும் அளவுக்கு போனார். படப்பிடிப்பில் தான் மட்டுமில்லாமல் தன்னுடன் நடிப்பவர்களும் சிறப்பாக நடிக்க வேண்டும் என எம்.ஆர்.ராதா எதிர்பார்ப்பார். ஆனால், அவரின் நடிப்பையே இயக்குனர் ஒருவர் குறை சொன்ன சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
கே.சங்கர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி உள்ளிட்ட பலரும் நடித்து 1960ம் வருடம் வெளிவந்த திரைப்படம் கைராசி. அப்போது எம்.ஆர்.ராதா ஒரே நாளில் பல படங்களிலும் நடிக்கும் பிஸியான நடிகராக இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அவரின் நடிப்பு கே.சங்கருக்கு திருப்தியா இல்லை. எனவே, ஒன்மோர் கேட்டார். எம்.ஆர்.ராதா மீண்டும் நடித்தார்.
இதையும் படிங்க: எப்படி இப்படி ஓப்பனா இருக்கீங்க?!. கேள்வி கேட்டவருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..
அதுவும் சங்கருக்கு திருப்தி இல்லை. ஆனால், எம்.ஆர்.ராதாவிடம் மீண்டும் நடியுங்கள் என கேட்ட முடியாது என்பதல் ஷாட் ஓகே என சொல்லிவிட்டார். அதன்பின் எம்.ஆர்.ராதவின் மேக்கப் மேனிடம் ‘அண்ணனிடம் நான் வேறொன்று எதிர்பார்த்தேன். ஆனால் அது இன்று வரவில்லை’ என சொல்ல அந்த மேக்கப் மேன் அடுத்தநாள் இதை எம்.ஆர்.ராதாவிடம் சொல்லிவிட்டார்.
உடனே படப்பிடிப்பு தளத்தில் இருந்து காரில் ஏறிய எம்.ஆர்.ராதா நேராக கே.சங்கர் வீட்டுக்கு போனார். அப்போது கைராசி படத்தின் தயாரிப்பாளரும் சங்கரின் வீட்டில் இருந்தார். உள்ளே போன எம்.ஆர்.ராதா ‘என்ன சங்கர்.. நேற்று நான் நடித்தது உங்களுக்கு திருப்தி இல்லை என கேள்விப்பட்டேன்’ என சொல்ல அவரோ பதறியபடி ‘இல்லண்ணே நான் அப்படி சொல்லல’ என ஏதோ சொல்லவர ‘பரவாயில்லை நாளைக்கு மீண்டும் ஷூட்டிங் வையுங்கள். அந்த காட்சியில் நான் மீண்டும் நடித்து கொடுக்கிறேன்’ என எம்.ஆர்.ராதா சொன்னார்.
சங்கரும், தயாரிப்பாளரும் ‘வேண்டாம்னே பரவாயில்லை’ என சொல்லியும் அவர் கேட்கவில்லை. அடுத்த நாள் படப்பிடிப்பு. அதே காட்சி.. அப்போது சங்கர் என்ன ஆசைப்பட்டாரோ அப்படியே நடித்து கொடுத்தார் எம்.ஆர்.ராதா. அதோடு, அந்த நாள் படப்பிடிப்புக்கு என்ன செலவு ஆனதோ அதையும் தயாரிப்பாளரின் கையில் கொடுத்துவிட்டார்.
இதையும் படிங்க: உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா