சூப்பர்ஸ்டார் விவகாரம்!.. கொந்தளித்த விஜய் பட இயக்குநர்… பஞ்சாயத்து முடிச்சி போச்சு கிளம்பு!..

Published on: August 3, 2023
vijay
---Advertisement---

சமீப நாட்களாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து தான் பெரும் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று எண்ணும் அளவிற்கு விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், இயக்குநர் பேரரசு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் பேரரசு விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக இவர் படங்கள் இயக்குவதில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பேரரசு எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் என்று பட்டம் கொடுத்து அப்படி அழைத்தார்கள். அவர் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்த பிறகும் கூட அவர் தான் மக்கள் திலகம். இன்று வரை அவர் மட்டும் தான்.

இதையும் படிங்க- தொடர் தோல்வி!.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுத்தே ஆகணும்!.. சொல்லி அடித்த விஜயகாந்த்…

அதே போல இன்று வரை சிவாஜி கணேசன் தான் நடிகர் திலகம். அதே போல சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் தான். அதற்கு போட்டி எல்லாம் போட தேவையில்லை. எப்போதுமே ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார். விஜய்க்கு தான் ஏற்கனவே தளபதி என்ற பட்டம் இருக்கிறதே. இதில் எதற்கு பிரச்சனை செய்து அடித்துக்கொள்ள வேண்டும். ரஜினியும், விஜயும் இதனை விரும்ப மாட்டார்கள்.

வசூலின் அடிப்படையில் எல்லாம் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடையாது. அமிதாப் பட்சன் படங்களில் நடிப்பதே இல்லை. ஆனாலும் அவர் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார். அதே போல தான் தமிழ் சினிமாவில் ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார். யார் அடுத்த உலக நாயகன் என்ற போட்டி எழவில்லை.

பிறகு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மட்டும் ஏன் இந்த போட்டி, பிரச்சனையெல்லாம். இதையெல்லாம் விட்டுவிடுங்கள்.  உலக நாயகன், மக்கள் திலகம் போல சூப்பர் ஸ்டார் என்பதும் ஒரு பட்டம், அவ்வளவு தான். எனவே இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்க வேண்டாம் என்று இயக்குநர் பேரரசு அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- விஷால் சரியான விஷம்.. இதனாலதான் சண்டையே வந்துச்சி.. கோபத்தில் வெடித்த அப்பாஸ்!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.