கேப்டன் நடிக்க வேண்டிய படம்! வடிவேலுவால் எல்லாம் போச்சு - பலமான கூட்டணியா இருந்திருக்கே

vijaykanth
Captain Vijayakanth: இன்று ஒரு நல்ல நடிகர் என்பதை விட ஒரு நல்ல மனிதரை இழந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சிங்க நடை, கர்ஜிக்கும் வசனம் என திரைப்படத்தில் பார்த்து வியந்த நம்ம கேப்டன் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தார்.
மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். எம்ஜிஆருக்கு பிறகு எம்ஜிஆரின் புகழை அப்படியே தன்னுள் கொண்டவர் விஜயகாந்த். செத்தா இப்படி சாகனும் என எம்ஜிஆருக்காக வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து சொன்ன விஜயகாந்த் நினைத்ததை சாதித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.
அதே மாதிரியான கூட்டத்தை அவர் இறப்பின் சமயத்திலும் பார்த்தோம். இந்த நிலையில் அவரை பற்றி சில மறக்க முடியாத சம்பவங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒன்றுதான் இது. அதாவது ரமேஷ் கண்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதவன்.
இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜயகாந்த் தானாம். அவருக்காக எழுதப்பட்ட கதைதானாம் ஆதவன் படம். விஜயகாந்துக்கும் மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால் அவருடய கால்ஷீட் பிரச்சினை காரணமாக சூர்யாவிற்கு சென்றிருக்கிறது.
இதையும் படிங்க : ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?
அதே நேரம் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடிக்கத்தான் ஆசைப்பட்டாராம். ஆனால் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தயாரித்ததால் அந்த நேரம் வடிவேலுவுக்கு அரசியல் செல்வாக்கும் அதிகம் இருந்ததால் உதய நிதி இதை வடிவேலுவே பண்ணட்டும் என்று சொன்னாராம்.
அதனால் வடிவேலுவால் நான் நடிக்க இருந்த ஒரு நல்ல கேரக்டர் மிஸ் ஆகி விட்டது என ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.
இதையும் படிங்க : வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..