Connect with us
actor vishal

Cinema News

அவரு வேணா பாடி பில்டரா போயிருக்க வேண்டியதுதான!… விஷாலை திட்டி தீர்க்கும் பிரபல இயக்குனர்…

விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் சண்டகோழி, தாமிரபரணி போன்ற பல திரைப்படங்கலின் மூலம் சினிமா துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.

பின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முக்கிய பதவியையும் வகித்தார். பின் தனக்கென உருவாக்கிய விஷால் ஃபிலிம் பேக்டரியின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். பெரும்பாலும் இவர் தயாரித்த திரைப்படங்களில் இவரே ஹீரோவாக நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:உன் சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையா? ஒரு வீடியோவை போட்டு மொத்த கோலிவுட்டிற்கும் ஆப்பு வச்ச விஷால்

ஆனால் அப்படங்கள் அனைத்தும் பெரிதளவில் வசூல் செய்யவில்லை. நான் சிவப்பு மனிதன், பாண்டிய நாடு போன்ற  திரைப்படங்கள் இவருக்கு தோல்வியையே பெற்று தந்தன. ஆனால் இவருக்கு பல ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியை பெற்று தந்தது.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படம் நல்ல ஒரு வசூலையும் பெற்று தந்தது. இத்திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைகளை கிளப்பியது.

அதாவது 4 கோடிக்கு கீழ் படம் இயக்கும் இயக்குனர்கள் படத்தினை இயக்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அவர்கள் அப்பணத்தை சேமித்து வைக்கலாம் என தெரிவித்திருந்தார். இதற்கு வளர்ந்து வரும் இயக்குனர்கள்  கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இதையும் வாசிங்க:முதல்வன் பட பாட்டில் பாம்பை வைத்ததே இதுக்குத்தானா?.. ஷங்கர் எமகாதகனா இருப்பார் போலயே!..

மேலும் இதற்கு பின் சில நியாயமான கருத்துகளும் இருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின. ஆனால் மைக்கேல் மதன காமராஜன் , மகளிர் மட்டும் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராசி அழகப்பன் விஷாலின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அப்படி இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ தங்களது படம் வெற்றி பெறவில்லை என்றால் அப்பணத்தினை வீணாக்க வேண்டாம் என தெரிவித்த விஷால் தான் தயாரித்த பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தபோதும் எதற்காக மார்க் ஆண்டனி எனும் திரைப்படத்தில் நடித்தார். அவர் உடல் வலுவானவர்தானே…சினிமாவை விட்டு விட்டு பாடி பில்டராக சென்றிருக்கலாமே… என ஆவேசத்தில் பேசினார்.

மேலும் 16 வயதினிலே போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டிலேயே உருவான படங்கள்தான் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தன என்றும் சினிமாவில் இந்த மாதிரியான திரைப்படங்களே பல புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிகாட்டியுள்ளார். எனவே விஷாலின் இந்த பேச்சினை ஏற்றுகொள்ள முடியாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

google news
Continue Reading

More in Cinema News

To Top