Connect with us
ajith

Cinema History

இப்படி சொல்லிதான் ஷாலினியை நடிக்க வச்சேன்!. அஜித் படத்தில் இயக்குனர் பார்த்த வேலை!…

shalini ajith: பாலச்சந்தரின் உதவியாளர்களில் ஒருவர் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன் படத்தை இயக்கி இயக்குனராக மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட். எனவே, அஜித்தின் குட் புக்கில் இருந்தார். அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார்.

காதல் மன்னனுக்கு பின் அஜித்தை வைத்து அமர்க்களம் படத்தை இயக்கினர் சரண். இந்த படத்தில்தான் அஜித்தும் – ஷாலினியும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் ஷாலினியின் மீது காதல் வயப்பட்டார் அஜித். ஒருகட்டத்தில் ஷாலினியும் சம்மதம் சொல்ல அவரையே அஜித் திருமணமும் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: எல்லாம் போச்சே!. கதறி அழுத செல்வராகவன்!. கலாய்த்த அமீர்!.. ஆனாலும் நச் பதில்தான்…

அஜித் – ஷாலினிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது அஜர்பைசானில் நடைபெற்று வருகிறது.

சரி.. இயக்குனர் சரண் கதைக்கு வருவோம் அமர்க்களம் படத்திற்கு பின் அஜித்தை வைத்து அட்டகாசம், அசல் ஆகிய படங்களை இயக்கினார் சரண். அசல் படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது. சரண் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அஜித் மீண்டும் அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: இது நடந்தா அமீரும் கார்த்தியும் மீண்டும் சேருவாங்க! – பயில்வான் ரங்கநாதன் சொல்லும் வழி இதுதான்!…

இந்நிலையில், அமர்க்களம் படத்தில் ஷாலினி நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சரண் ‘அமக்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். எனவே, இந்த படத்தில் அவர் அறிமுகமாகும் போது ஒரு பாடல் காட்சி இருக்கிறது எனவும், அதை நீங்களே பாடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன்.

saran

அப்படித்தான் பரத்வாஜ் இசையில் ‘தரார ரார தாரார ரார’ என்கிற பாடலை அப்படத்தில் ஷாலினி பாடினார். அப்படம் உருவான போதே ஷாலினியை அஜித் காதலித்தது எனக்கு தெரியும். உங்கள் அறிமுக பாடலை நீங்களே பாடலாம் என தூண்டில் போட்டு பிடித்த அந்த தங்க மீன் இப்போது ஏகேவின் வைரத் தொட்டியில்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவர்கிட்ட தர்ம அடி வாங்கினேன்!.. இயக்குனர் ஆன கதையை சொல்லும் அமீர்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top