கடந்த பல வருடங்களாகவே விஜய் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களையும், விஜயை நக்கல் அடிப்பவர்களையும் மிகவும் மோசமாக விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்
. விஜய்க்கு எதிராக ஒரு கருத்தை சொல்லி விட்டால் உடனே அந்த நடிகரின் படம் வெளியானால் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை இரவு முழுக்க கண் முழித்து பரப்புகிறார்கள்.
ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா, கழுகு, கதை சொன்னார். அவர் விஜயைத்தான் காக்கா என சொல்கிறார் என புரிந்துகொண்ட விஜய் ரசிகரக்ள் இப்போது வரை ரஜினியை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். ரஜினியின் வேட்டையன் படம் வந்தபோது முதல் காட்சி வெளியாவதற்கு முன்பு வேட்டையன் டிசாஸ்டர் என ஹேஷ்டேக் போட்டார்கள். இதுதான் விஜய் ரசிகர்களின் குணம். ஒருவரை தூக்கி வைப்பதற்காக ஒருவரை இழிபடுத்தி பேசாதீர்கள் என அஜித் ஒருமுறை அட்வைஸ் செய்தும் அவர்கள் கேட்கவில்லை.
தற்போது அவர்களிடம் பராசக்தி படம் சிக்கியிருக்கிறது. அதற்கு காரணம் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதுதான். ஆனால் சென்சாரில் சிக்கி ஜனநாயகன் படம் வெளிவராமல் போனது. அந்த கோபமும் விஜய் ரசிகர்களிடம் சேர்ந்து கொண்டதால் மொத்த கோபத்தையும் பராசக்தி படத்தின் மீது காட்டினார்கள்.
பிரின்ஸ் படம் வெளியானபோது படம் பார்த்து விட்டு ரசிகர்கள் வெளியே வந்து படத்திற்கு எதிராக சொன்ன விமர்சன வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து பராசக்தி படத்தின் ரிசல்ட் இதுதான் என பொய்யாக பதிவிட்டார்கள்.
இந்நிலையில் நேற்று ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சுதாகொங்கரா ‘ஒரு படத்திற்கு எதிராக ஃபேக் ஐடி பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு செய்கிறார்கள்.. நாம் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.. இதை அரசியல்வாதிகள் செய்யவில்லை..
பொங்கலுக்கு வெளியாகாமல் போன படத்தின் நடிகரின் ரசிகர்கள்தான் இதை செய்கிறார்கள். இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம்’ என்று ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் ‘ஜனநாயகன் படம் வெளியாகியிருந்தால் முதல் காட்சி சென்று நானே பார்த்திருப்பேன்’ என கூறியிருக்கிறார்.