என்கிட்டையே திமிரா நடந்துக்கலாமா? சீண்டிய தயாரிப்பாளரை கடனாளியாக்கிய கமல்ஹாசன்…

Published on: February 2, 2024
---Advertisement---

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் உச்சத்தில் இருப்பதை போல சில நேரங்களில் தன்னுடைய வன்மத்தையும் கக்கி சிலரை காலி செய்ததாகவும் கூட தகவல் இணையத்தில் இருக்கிறது. அதுப்போல ஒரு தயாரிப்பாளரையே காலி செய்த ஒரு விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் குழந்தையாக அறிமுகமாகி இளைஞராக வளர்ந்து இன்று கொடிக்கட்டி பறந்துவருகிறார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் பல வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்தவரும் அவர் தான். நிறைய டெக்னாலஜியை மட்டுமல்லாமல் தமிழ் சினிமா செய்ய தயங்கிய பல கதைகளை சினிமாவாக்கினார்.

Also Read

இதையும் படிங்க: ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

ஆனால் பொதுவாக கமல்ஹாசன் மரியாதை தெரியாமல் தன்னிடம் நெருங்குபவர்களை அவர் தப்புக்கு தண்டனையை சரியாக திருப்பி கொடுப்பார். அப்படி ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை காலி செய்தாராம். இதை செய்யாறு பாலு தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, கமலின் ஒரு பிறந்தநாளில் பிரபலங்கள் கூடி ஜாலி செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கமலை பார்த்ததும் குடிப்போதையில் இருப்பதை மறந்து அவர் தோல் மேல் கைப்போட்டு நாம ஒரு படம் பண்ணுவோம் சார் என திமிரா சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: எதற்காக இந்த வெட்டி விளம்பரம்? ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் வசூலே இவ்ளோதான்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

அப்படி எடுக்கப்பட்ட படம் கமலின் எக்ஸ்ப்ரிமெண்ட்டலுக்காக எடுக்கப்பட்ட படம். அதுவும் அந்த இயக்குனரை வச்சி செய்ய எடுக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அவரும் நஷ்டத்தில் கடனாளியாக மாறினார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்.