எதற்காக இந்த வெட்டி விளம்பரம்? ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் வசூலே இவ்ளோதான்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

Singapore Saloon: கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’ போன்ற படங்களை இயக்கியவர்தான் இந்த கோகுல்.

மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு மற்றுமொரு வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு சிங்கப்பூர் சலூன் படமும் ஓரளவு திருப்தியை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: பயப்படலைனாலும் பயந்த மாதிரி காட்டிக்கோ!… மீண்டும் டீம் ஏவுடன் இணைந்த மாயா!… இதெல்லாம் ஓவர் மக்கா

படம் பார்த்த அனைவரும் சொன்ன ஒரே கருத்து சத்யராஜின் எண்ட்ரிக்கு பிறகுதான் படமே சூடுபிடிக்கிறது என்று. அந்தளவுக்கு சத்யராஜ் வரும் காட்சிகள் சும்மா களைகட்டுகிறது. சத்யராஜுடனான ரோபோசங்கர் காம்போவும் ஒரு புதுமையான ரசிக்கும் படியான கூட்டணியாக அமைந்திருந்தது.

முதல் பாதி கண்டிப்பாக மக்களை ரசிக்க வைத்திருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் பாதியில் சீரியஸ் மோடுக்கு கொண்டு சென்று கதையை எங்கெங்கேயோ நகர்த்தி விடுகின்றது.

இதையும் படிங்க:எப்பா தர்மபிரபு சீக்கிரம் இந்த மகா சங்கமத்த முடிச்சி விடுங்க.. முடியல எங்களால…

இந்த நிலையில் சமீபத்தில்தான் சிங்கப்பூர் சலூன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் ஏன் இந்த வெட்டி விளம்பரம் என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது சிங்கப்பூர் சலூன் படத்தின் மொத்த பட்ஜெட் 23 கோடியாம். ஆனால் வசூல் வெறும் 7 கோடிதான் என்று சொல்லப்படுகிறதாம்.

இதில் எங்கே சக்சஸ் இருக்கிறது? ஏன் இந்த வெட்டி பந்தா? என்றெல்லாம் கடுமையாக சிங்கப்பூர் சலூன் படம் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

 

Related Articles

Next Story