கோட் படத்துல ஹீரோக்கள் நடிக்க சம்மதிச்சது எப்படி? வெங்கட்பிரபு ஓபன்ஸ் தி சீக்ரெட்
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸானது. சில நிமிடங்களில் யூடியூப்பிலும் மில்லியன் கணக்கானோர் பார்த்து சாதனை இந்தப் படம் படைத்துள்ளது.
இது விஜயின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இந்தப் படம் குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
விஜய் சாரை ரொம்ப நாளா ஒரு கமர்ஷியல் பேஸ்ல எப்படி எல்லாம் பார்க்கணும்னு நினைச்சோமோ அந்த ஆசை இதுல நிறைவேறியிருக்கு. அதே மாதிரி ஒரு ஜானரில ஆக்ஷன் படமாகக் கொடுத்திருக்கோம்.
இந்தப் படத்தில முக்கியமாக பிரசாந்த், பிரபுதேவா நடிச்சிருக்காங்க. எல்லாருக்குமே நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள். படத்தில் மைக் மோகன் நடிச்சிருக்காரு. அவரைப் பார்த்து வளர்ந்தவங்க தான் நாங்க. அவரை ரொம்ப பிடிக்கும்.
எப்படியாவது அவரைத் திரும்ப கொண்டு வந்து படத்துல நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா இந்தப் படத்துல அவர் ஒத்துக்கிட்டாரு. அதுவே பெரிய விஷயம். எல்லாரும் விஜய் சார் படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டாங்க.
இது விஜய் சார் படம்னு எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் அவங்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் தான் நடிக்க ஒத்துக்கப் போறாங்க. அதை நாம கொடுத்துருக்கோம். நீங்க படம் பார்த்தீங்கன்னா தெரியும். எல்லாருக்குமே ஈக்குவலான போர்ஷன் இருக்கும். நல்ல தீனி இருக்கும்.
டெக்னிக்கல் ஒர்க் இப்போ போய்க்கிட்டு இருக்கு. இப்ப தான் சென்சாருக்குப் போறதுக்கு படம் ரெடியாகிகிட்டு இருக்கு. இப்போ நான் பேசினா அது ஓவரா இருக்கும். அதனால செப்டம்பர் 5 படம் பார்த்துட்டு நீங்க பேசுங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்பாத்தி S. அகோரம் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் கோட். தளபதி விஜயின் 68வது படம். இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகிபாபு, பிரேம்ஜி, யுகேந்திரன், விடிவி கணேஷ், பார்வதி நாயர், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.
விஜயகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர். விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 3 பாடல்கள் உள்ளன.