நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குதான்னு இருந்தா!… மீம்ஸால் கடுப்பான விக்கி!…

Published on: November 21, 2024
---Advertisement---

Vignesh shivan: நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்ற கல்யாண வீடியோவால் கடந்த சில நாட்களாக இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி மிகுந்த பரபரப்புடன் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றனர்.

எங்களுடைய திருமண வீடியோவிற்காக நானும் ரவுடி தான் படத்தின் 3 நொடி வீடியோவை கேட்டேன். ஆனால் தனுஷ் அதற்கு மறுத்து விட்டார். இதற்காக 2 ஆண்டுகள் நாங்கள் காத்திருந்தோம் என்று நயன்தாரா பரபரப்பான குற்றச்சாட்டினை தனுஷுக்கு எதிராக வைத்தார். இதற்கு விக்னேஷ் சிவனும் ‘ஆமாம் பாஸ் அதுக்கு நான்தான் சாட்சி’ என ஒத்து ஊதினார்.

இதையும் படிங்க: குழந்தை இருக்கிறது பிக்பாஸ் போனப்ப தெரியலயா?!. கஸ்தூரிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்!…

இதைப்பார்த்து ஏற்கனவே வன்மத்தில் இருந்த பிரபலங்கள், ரசிகர்கள் நயன்தாராவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவினை குவித்தனர். ஆனால் திருமண வீடியோவில் 23 நொடிகள் நானும் ரவுடி தான் பட காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு நடிகை தனுஷ் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஆனால் அவரின் வக்கீல் மூலமாக ரூபாய் 1௦ கோடி கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

23 நொடிகள் காட்சிக்கு ரூபாய் 1௦ கோடி ரொம்பவே ஓவர் என்றாலும் இதற்கு பின்னர் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால் அனைவரும் தனுஷின் பதிலுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

இந்தநிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலுக்கு வந்த மீம் குறித்து ஆத்திரத்துடன் பேசியிருக்கிறார். அதில், ‘ எங்களோட காதல் வெளியில தெரிஞ்சப்போ ஒரு மீம்ல, ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கெடைக்கும்னு இருந்தா அது யாரால மாத்த முடியும்’ என போட்டிருந்தாங்க..

‘ஏன் உளுந்தூர்பேட்டை நாய்க்கு பிரியாணி கெடைக்கக் கூடாதா?.. ஒரு பஸ் கண்டக்டர் சூப்பர்ஸ்டார் ஆகலையா?’ என கேட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ‘நல்லவேளை உங்கள வச்சு அஜித் சார் படம் பண்ணல. புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் இருக்கீங்க. அவங்க நயன்தாரா இல்லாம வேற யாராச்சும் இருந்திருந்தா நீங்க அவங்கள கல்யாணம் பண்ணி இருப்பீங்களா?’ என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஓரளவுக்கு பண்ணுங்க ஒரேயடியா பண்ணா எப்படி?….

இதையும் படிங்க: என்னது நான் வில்லனா?… இத யாரு கிளப்பிவிட்டதுனு தெரியும்… விஷால் இப்படி சொல்லிட்டாரே…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.