அமரன் படம் எடுக்க இந்த இயக்குனர்தான் காரணமா?.. கமலே கூப்பிட்டு பாராட்டி இருக்கிறாரே!..

amaran
அமரன் திரைப்படம் உருவாவதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் என்று கமலஹாசன் அவர்கள் இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்டியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன- சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு இருந்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
இதையும் படிங்க: அரசின் கோரிக்கை காற்றில்விட்ட விஜய் டிவி… சிக்கலில் விஜய் சேதுபதி… தேவையா?
மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியாகி எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் இல்லாமல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அமரன் திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் அமரன் திரைப்படம் வசூல் செய்துள்ளது. தினமும் புதிய புதிய சாதனைகளை படைத்து வரும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படத்தை பிடித்திருக்கின்றார்.

amaran
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் விஷ்ணுவரதன் அமரன் திரைப்படம் பற்றியும் கமலஹாசன் பற்றியும் பேசியிருக்கின்றார் அமரன் படத்தை கமலஹாசன் தயாரிக்க விஷ்ணுவரதனும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்திருக்கின்றார் ஹிந்தியில் ஷெர்ஷா என்கின்ற படத்தை இயக்கியிருந்தார்.
இது மறைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் விஷ்ணுவர்தனை அழைத்து மனதார வாழ்த்தினார்.
இதையும் படிங்க: சத்தமே இல்லாம பூஜைய முடிச்சுட்டீங்க போலயே?… வேற லெவல் லுக்கில் எஸ்.கே-சுதா கொங்கரா..!
மேலும் அவரிடம் நான் அமரன் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளேன். அப்படமும் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்த வரலாறு திரைப்படம் தான். நான் இந்த திரைப்படத்தை எடுக்க ஒரு காரணம் ஷெர்ஷா திரைப்படம் தான். நீங்களும் அதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கமலஹாசன் வாழ்த்தியதாக விஷ்ணுவரதன் பேசியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.