Cinema News
500 கோடியை தாண்டி வசூல்!. தமிழ் சினிமாவை வேறலெவலுக்கு கொண்டு போன 5 இயக்குனர்கள்…
Lokesh kangaraj: தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் எல்லோரின் படங்களும் பல நூறு கோடிகளை வசூலிக்கும் என சொல்ல முடியாது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும். முன்பெல்லாம் 100 கோடி வசூல் செய்வதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் சில தமிழ் படங்கள் ரூ.500 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் படங்களை இயக்கிய 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வைத்த ஐந்து இயக்குனர்கள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். தமிழில் பல திரைப்படங்களை இயக்கியர் மணிரத்னம். இவரின் படங்கள் உலக தரத்தில் இருக்கும். இவருக்கென ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஆனால், இவரின் படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாது. ஆனால், இவர் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் அதை உடைத்து 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: ஹீரோ மட்டும்தான் பழி வாங்கணுமா?.. நாங்களும் செய்வோம்!.. கதாநாயகிகள் இறங்கி நடித்த படங்கள்..
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் ஷங்கர். இவரின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது ஷங்கர் இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தெலுங்கில் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
அடுத்து, பீஸ்ட் திரைப்படம் மூலம் ட்ரோலில் சிக்கிய இயக்குனர் நெல்சன் ரஜினியை வைத்து சொல்லி அடித்த திரைப்படம்தான் ஜெயிலர். இந்த படம் 700 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இதன் மூலம் ரூ.50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக நெல்சன் மாறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு 18 பட வாய்ப்புகளை வாங்கி கொடுத்த தோல்வி படம்!.. அட ஆச்சர்யமா இருக்கே!..
கடந்த சில வருடங்களில் கைதி, விக்ரம், மாஸ்டர் 3 படங்களை இயக்கி பெரிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவர்கள் எல்லாவற்றையும் ஓரங்கட்டி முதலிடத்தில் இருப்பவர் அட்லீ.
அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த தமிழ் சினிமா இயக்குனரின் படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. எனவே, முதல் ஆயிரம் கோடி வசூலை கொடுத்த முதல் தமிழ் சினிமா இயக்குனராக அட்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரிந்திருந்த சிவாஜி – கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..