Cinema News
கார்த்திக்கு ஒர்க்அவுட் ஆவது சூர்யாவுக்கு பேக் ஃபயர் ஆகுதே?!… இதை யாராச்சும் நோட் பண்ணிங்களா?…
நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்கும் இயக்குனர்களின் படங்களில் நடிகர் சூர்யா நடித்தால் தோல்வி அடைவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக முழுக்க முழுக்க கவனம் செலுத்தி நடித்த திரைப்படம் கங்குவா. இந்த படத்தின் மீது நடிகர் சூர்யா ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை அனைத்துமே மண்ணோடு மண்ணாக போய்விட்டது.
இதையும் படிங்க: Samantha: என் Ex-க்கு நான் கொடுத்த காஸ்ட்லியான கிஃப்ட்.. அநாவசிய செலவு பற்றி சமந்தா சொன்ன பதில்
இந்த படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் வசூலிலும் சொதப்பியது. சூர்யாவின் திரை பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் கங்குவா. பேன் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் படத்தை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால் கங்குவா கடுமையான விமர்சனங்களை பெற்று தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் சிறுத்தை சிவா தான் என்று பலரும் அவரை திட்டி வருகிறார்கள். மேலும் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக்கை வைத்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் சூர்யாவை வைத்து இயக்கும் போது மட்டும் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வருகிறார்கள் என்று லிஸ்ட் போட்டு கூறியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த திரைப்படம் பையா. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருப்பார். அவர் சூர்யாவை வைத்து அஞ்சான் என்ற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து கார்த்திகை வைத்து கடைகுட்டி சிங்கம் படத்தை கொடுத்த பாண்டியராஜ் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. கடைசியாக சிறுத்தை சிவா நடிகர் கார்த்திக்கை வைத்து சிறுத்தை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மூலமாக தான் அவருக்கு சிறுத்தை சிவா என்கின்ற பெயரே வந்தது. அந்த அளவுக்கு சிறுத்தை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
மேலும் கார்த்திக்கு சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு முக்கிய படமாகவும் அமைந்திருந்தது. இவர் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருந்தார். ஆனால் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றது.
இதையும் படிங்க: ஆழம் தெரியாம காலை விடாதீங்க… ஏ.ஆர்.ரகுமான் நினைச்சா சந்தி சிரிக்க வச்சிருவாரு..!
இதை வைத்துப் பார்க்கும்போது கார்த்திக்குக்கு ஒர்க் அவுட் ஆகும் இயக்குனர்களுடன் நடிகர் சூர்யா சேரும்போது அவருக்கு அது ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே இனி கார்த்திகை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுடன் இணைந்து நடிகர் சூர்யா படம் நடிக்காமல் இருப்பது நல்லது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் கார்த்திகை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் விரைவில் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் என்கின்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படமாவது ஹிட்டாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.