More
Read more!
Categories: Cinema News latest news

அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?

Actor Vijaykanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ஒரு மாபெரும் இடத்தில் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு துணை நடிகராக பின் நடிகராக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தன் அன்பால் கட்டிப்போட்டு வைத்தார் விஜயகாந்த்.

இவருடைய சினிமா வாழ்க்கையையே திருப்பிப் போட்ட திரைப்படமாக அமைந்தது வைதேகி காத்திருந்தாள். வணிக ரீதியில் மிகவும் வெற்றி பெற்ற திரைப்படமாக வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் அமைந்தது. 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் உடன் ரேவதி மற்றும் பலர் நடித்தனர். ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: STR  48 க்கு சோதனை ஓட்டமா தக் லைஃப்..? சிம்புவுக்கு பிக் ஓபனிங் கொடுக்க உலக நாயகன் திட்டம்

இந்தப் படத்தின் கதையானது இளையராஜா உருவாக்கிய பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தை வினியோகஸ்தர்களுக்கு முதலில் போட்டு காண்பித்திருக்கிறார்கள். முதலில் அந்த படத்தில் சுசீலா பாடிய  ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ என்ற பாடல் அந்த படத்தில் இடம்பெறவே இல்லையாம்.

அதனால் ஆரம்பத்தில் இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்திருக்கின்றனர். அந்தப் பாடலும் இடம்பெற்றால்தான் படத்தை வாங்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால்  படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜனை அழைத்து இந்த பாடலை படமாக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் சுந்தர்ராஜன் அப்போது வேறொரு படங்களில் பிஸியாக இருந்ததனால் அவரால் படமாக்க முடியவில்லையாம்.

இதையும் படிங்க: கமல் நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி!.. சூப்பர்ஸ்டாருக்கு ஒரு கிளாசிக் படம் மிஸ் ஆகி இருக்கும்!..

அதனால் அவருடைய உதவியாளர் ஒருவரை வைத்து இந்த பாடலை படமாக்கி அதன் பிறகு படத்தில் சேர்த்து இருக்கின்றார்கள். பின்னாளில் அந்த உதவி இயக்குனருக்கு படத்தின் தயாரிப்பாளர் ஒரு வாய்ப்பை கொடுத்து விஜயகாந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அந்த படம் தான் நானே ராஜா நானே மந்திரி திரைப்படம்.

Published by
Rohini

Recent Posts