உன்ன பாத்தாலே மஜாதான்!.. கில்மா டிரெஸ்ஸில் கிளுகிளுப்பு ஏத்தும் டிடி!..
Divyadharshini: இப்போதெல்லாம் டிவி தொகுப்பாளினிகள் கூட நடிகைகளை போல மாடலிங் துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகைகளை போலவே அவர்களும் பல இடங்களுக்கும் சென்று கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதில் விஜய் டிவி திவ்யதர்ஷினியின் ஒருவர். ரசிகர்கள் சுருக்கமாக இவரை டிடி என அழைப்பார்கள். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்தாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது. சினிமா பிரபலங்களிடம் அழகாக பேசி அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கும் பதிலை நேக்காக வாங்கிவிடுவார்.
எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா முதன் முதலாக சொன்னதே டிடி-யிடம்தான். சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதன்பின் டிடி இதுவரை 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை. டிவியில் ஆங்கரிங் பண்ணுவது மட்டுமில்லாமல் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக கலக்கி வருகிறார். திரைபப்டங்களில் நடித்து வருகிறார். பவர் பாண்டி, காபி வித் காதல் என பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது டிடியின் வேலை. அதன்படி, டிடியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.