Cinema History
சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?
தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவாஜி கணேசன். பராசக்தி முதல் படையப்பா வரை திரை உலகையே தன் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டவர்.
பாமர ரசிகர்களுக்கும் புரியும் வகையில் உணர்ச்சிகளையும் முகபாவங்களையும் துல்லியமாகக் கடத்துபவர். இவர் உடல் மொழியே பார்ப்பதற்கு யதார்த்தமாக இது நடிப்பா என்றே தெரியாத வகையில் அப்படியே கேரக்டருடன் ஒட்டிப்போய் விடும்.
நாம் எல்லாம் சிவபெருமானையோ, கர்ணனையோ, வீரபாண்டிய கட்டபொம்மனையோ, பாரதியாரையோ, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரையோ பார்த்திருக்க மாட்டோம்.
ஆனால் அவர்களைத் தன் அபார நடிப்பாற்றலால் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லும் அளவில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் தான் சிவாஜி.
இவர் இவ்வளவு திறமையாக நடித்த பின்னர் தான் நடிகர் திலகம் பட்டம் கிடைத்ததா என்றால் இல்லை. இது அவர் நடித்த முதல் படத்தின்போதே கிடைத்து விட்டது. பராசக்தியில் அவர் பேசும் கம்பீரமான அந்த கோர்ட் சீனை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.
நடிகர் திலகம் பட்டம் கிடைத்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு. அது என்னவென்று பார்ப்போம்.
1960 களில் சம்பத்குமார் என்பவர் சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்தார். அவர் பேசும் படம் என்ற ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் பிரபலங்களின் போட்டோவை வெளியிட்டு அசத்துவார். அந்த வகையில் பராசக்தி படம் வெளியானதும் இம்மாத நட்சத்திரம் என்று சிவாஜிகணேசனின் போட்டோவைப் போட்டார். இவர் தான் இம்மாத நட்சத்திரம் என்று போடப்பட்டு வருங்காலத்தில் முன்னணி நடிகராக வருவார் என்றும் போடப்பட்டு இருந்தது.
அது பல ரசிகர்களைக் கவர்ந்தது. 2 பேர் சம்பத்குமாருக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினர். தாங்கள் பத்திரிகையின் சார்பாக ஒரு விழாவை நடத்துங்கள். அதில் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்குங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சம்பத்குமார் சிவாஜிகணேசன் என்று எழுதுவதற்கு முன்னால் நடிகர் திலகம் என்ற பட்டத்தையும் சேர்த்தே எழுதினார்.
இதையும் படிங்க… மற்ற மொழிகளில் வில்லனாக மாஸ் காட்டும் மலையாள நடிகர்கள்! எண்ட சாரே விநாயகன பீட் பண்ண முடியுமா?
அது மட்டுமல்லாமல் 1957ல் சிவாஜி நடித்த அம்பிகாபதி என்ற படம் வெளியானது. அந்தப் படத்தில் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் டைட்டில் போடப்பட்டது.