Connect with us
goundamani

Cinema History

கவுண்டமணியா வேண்டவே வேண்டாம்..! இவரை போடுங்க அடம்பிடித்த பிரபல நடிகர்கள்..!

காமெடி நடிகர்கள் பலர் வந்தாலும் தனக்கென தனி பாணியை வளர்த்துக் கொண்டு சிகரம் தொட்டவர் கவுண்டமணி. இவரின் கவுண்டர் பஞ்சுகள் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமாக்கியது. படங்களில் பெரும்பான்மையாக காமெடி காட்சிகளில் செந்தில் உடன் இடம் பெற்றிருக்கும். இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை பார்க்கும்போது சிரிக்காதவர்களே இருக்க முடியாது. நடிகர்களில் சத்யராஜ் உடன் அதிக படங்களில் நடித்து இருவரும் காமெடி காட்சிகள் பின்னி எடுத்து இருப்பார்கள். காமெடி மட்டுமல்லாது குணசத்திர கதாபாத்திரம் வில்லன் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

goundamani 2

goundamani 2

அக்காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இடம்பெறாத படங்களே வெளிவராது. இவர்கள் இருவரின் கால் ஷீட்டுகள் கிடைத்தால் தான் படத்தையே ஆரம்பிப்போம் என்று தயாரிப்பாளர்கள் தீவிரமாய் இருந்தார்கள். இருப்பினும் அந்த சமயத்தில் இவர்களுக்கு மாற்றாக வேறொரு காமெடி நடிகர் அல்லது அடுத்த தலைமுறை காமெடி நடிகரை தமிழ் சினிமா தேடிக் கொண்டிருக்கும் பொழுது கிடைக்கப்பெற்றவர் தான் ஜனகராஜ். ஜனகராஜ் பாரதிராஜாவினால் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்த ப்பட்டார். தொடர் வெற்றிக்குப் பின் பல படங்களில் நடித்தார் இவரின் தனி அடையாளமே முகத்தை சுளித்துக்கொண்டு பேசுவது தான்.

goundamani with senthil

goundamani with senthil

அதில் வெளிப்படும் காமெடி புதுமையாகவும் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. ரஜினி மற்றும் கமல் திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார். அக்காலக்கட்டத்தில் காமெடியில் கோலோச்சி கொண்டிருந்த கவுண்டமணியை புறக்கணித்ததால் அந்த இடத்தை ஜனகராஜ் கச்சிதமாக நிரப்பி கொண்டார்.

janaga raj

janaga raj

இதற்கு காரணம் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ரஜினி,கமல் மற்றும் கவுண்டமணி ஆகிய மூவரும் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படம் மூவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சமகாலங்களில் அறிமுகமாகி மூவரும் திரைத்துறையில் வளர்ந்து வரும் நிலையில் அப்பொழுதே கவுண்டமணி பாகுபாடு பாராமல் கவுண்டர் பஞ்சுகளை தெறிக்க விட்டிருக்கிறார். பின்னர் கமல் மற்றும் ரஜினி இருவரும் மிகப்பெரிய ஹீரோக்களாக வந்த பின்பும் படப்பிடிப்பு தளங்களில் சுற்றி இருப்பவர்களின் முன்னிலையில் அவர்களை வாப்பா போப்பா என்று அழைப்பாராம்.

janaga raj with raji and kamal

janaga raj with raji and kamal

இதை தவிர திரைப்படங்களில் நடிக்கும் பொழுதும் காட்சிகளில் இவர் விருப்பம் போல் பஞ்ச் போடுவது போன்றவைகள் எல்லாம் இருவருக்கும் பிடிக்கவில்லை. மேலும் தங்களுடைய இமேஜ் இதனால் குறையும் என்பதால் கவுண்டமணியை தங்களின் படங்களில் வேண்டாம் என்று புறக்கணித்துள்ளனர். இது ஜனகராஜிற்க்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

இவருடைய முகம் பாவனை மற்றும் சென்னை தமிழில் பேசும் குரல் வளம் இவருக்கு தனித்துவத்தை பெற்று தந்தது. இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஜனகராஜ் 90களில் முன்னணி நடிகராக விளங்கினார். இருந்தபோதிலும் தற்பொழுது சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top