latest news

Drishyam The Conclusion Box Office : பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் த்ரிஷ்யம் த கன்க்ளூஷன்!

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம் ‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் மோகன் லாலின் ‘த்ரிஷ்யம் 3’. இப்படம் ஹிந்தியில் ‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’ (Drishyam: The Conclusion) என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படம் நேற்று முன்தினம் (அக்டோபர் 2-ஆம் தேதி) தியேட்டர்களில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதில் கதாநாயகன் ஆக அஜய் தேவ்கன் வலம் வருகிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் தபு, ஷ்ரேயா சரண், ஜெய்தீப் அஹ்லாவத், ரஜத் கபூர், பிரகாஷ் ராஜ், இஷிதா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படத்துக்கு அதிகமாக பாசிட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணமுள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ.177.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author
siva ✓