அசோகன் கடனாளியா மாறியதற்கு எம்ஜிஆர்தான் காரணமா? இப்படியெல்லாம் நடந்திருக்கா?

by Rohini |
mgr
X

mgr

Asokan to MGR: சிறுவயது முதலே பல நாடக மேடைகளில் ஏறி இறங்கியவர் அசோகன். கண்ணதாசன் கதை எழுதிய படங்களில் தமிழை அவ்வளவு அற்புதமாக பேசி நடித்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் சிறந்த வில்லன்களில் அறியப்பட்டவர் நடிகர் அசோகன்.

வில்லனாக நடித்ததை விட சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார் அசோகன். உயர்ந்த உள்ளம் திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கினார்.சினிமாவில் பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவினால் தான் அசோகன் அறிமுகமானார்.

இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஆஷ்துரை வேடமேற்று தமிழ் திரையுலகில் படிப்படியாக வளரத்தொடங்கினார். இவரின் வளர்ச்சியை பார்த்த எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் அசோகனை இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் அசோகன் தோன்ற ஆரம்பித்தார்.

அதிலிருந்தே எம்ஜிஆருக்கும் அசோகனுக்கும் இடையே நெருக்கமான நட்பு வளர ஆரம்பித்தது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உயர ஆரம்பித்தார் அசோகன். எம்ஜிஆரை வைத்து ‘ நேற்று இன்று நாளை’ திரைப்படத்தை எடுத்தார் அசோகன்.

இதையும் படிங்க: இப்படி ஜொள்ளுவிட வச்சிட்டியே!.. செதுக்கி வச்ச அழகில் அசத்தும் மாளவிகா மோகனன்!..

ஆனால் அந்தப் படம் வளர ஆரம்பிக்கும் போதே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாராம் அசோகன். அந்த படத்திற்கு பிறகுதான் பெரும் கடனாளியாக மாறினார் என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் கூறினார்.

ஆனால் நடிப்பில் உணர்ச்சிப் பொங்க நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். கண்புருவமும் நரம்புமே இவர் நடிப்பின் மீது எந்தளவு ஆர்வம் வைத்திருக்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும்.

இதையும் படிங்க: அண்ணனுக்காக உயிரயே கொடுக்கும் தம்பி! விஜய் – அட்லீ பின்னி பிணைய இதுதான் காரணமா?

இதற்கிடையில் தன் அரசியல் பயணத்திலும் அசோகன் தன்னுடன் இருக்க வேண்டும் என எம்ஜிஆர் நினைத்தார். ஆனால் அதுமட்டும் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

Next Story