துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு ஆசையா?!. கமலோடு நடிச்சும் ஆசை தீரலையா?!.. என்னப்பா சொல்றீங்க!…

0
169

Dulquer: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் கமலின் தக் லைஃப் படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். ஆனால் அதை விட அவர் நடிக்க ஆசைப்பட்டு கொண்டு இருப்பது வேறொரு நடிகருடன் தானாம். அதுகுறித்து அவர் ஓபனாக சொல்லி இருக்கும் தகவல்கள் கசிந்துள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தின் முக்கிய நடிகரான மம்முட்டியின் மகன் தான். மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர். அப்போதே அவருக்கு தமிழிலும் கூட ரசிகர்கள் அதிகரித்தனர். முதல் தமிழ் படமான வாயை மூடிப் பேசவும் பெரிய அளவில் ரீச்சை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு நோ சொன்ன படக்குழு..! பிடிவாதமாக நின்று சாதித்து காட்டிய பஞ்சு அருணாச்சலம்.. எந்த படம் தெரியுமா?

அதை தொடர்ந்து ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய தமிழ் திரைப்படங்கள் அவருக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா நல்ல ரீச்சை கொடுத்தது.

இதனால் துல்கர் சல்மானுக்கு தொடர்ச்சியாக கோலிவுட் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கமலுடன் தக் லைஃப், சூர்யா நடிப்பில் புறநானாறு படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு முன்னணி கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும் துல்கர் சல்மானுக்கு ஒரு நடிகருடன் நடிக்க தான் ரொம்பவே ஆசையாம். கமலுடனே நடிக்க வாய்ப்பு கிடைச்சிட்டு அப்புறம் என்னவென ரசிகர்கள் கேட்டால் அவர் சொன்ன பதில் தான் தற்போது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியராஜின் ஹிட் படத்தில் நடித்து இருக்கிறாரா அவர் முதல் மனைவி… அவர் இறந்ததுக்கும் காரணம் இதுதானா?

துல்கரின் வாழ்நாள் ஆசையே தந்தை மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தானாம். அதை மம்முட்டியிடம் துல்கர் சொல்லியும் விட்டாராம். ஆனால் மம்முட்டி மகன் ஆசைக்கு உடனே ஓகே சொல்லவே இல்லையாம். 

நேரம் அமையும் போது பார்த்துக்கலாம் எனக் கூறி மறுத்து விட்டாராம். நடிகர்கள் எல்லாம் மகன்களுடன் நடிக்கும் இந்த காலத்தில் அவர் கேட்டு கூட மறுத்த மம்முட்டி வேற லெவலுப்பா என புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள். ஆனா இவங்க காம்போவும் நல்லா தானே இருக்கும்.

google news