Cinema News
‘கேப்டன் பிரபாகரன்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ்! சொல்லும் போதே அழுத மன்சூர் அலிகான்
கோலிவுட்டில் இன்றுவரை அனைவருக்கும் பிடித்த நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜயகாந்த். அவரை பற்றிய பல செய்திகள் நாள்தோறும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் லியோ படத்தை புரோமோட் செய்யும் வேலையில் இருக்கும் மன்சூர் அலிகானும் கேப்டனை பற்றிய பல சுவாரஸ்ய செய்திகளை சொல்லியிருக்கிறார்.
மன்சூர் அலிகானும் விஜயகாந்தும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். பல முறை கேப்டனிடம் சண்டை காட்சிகளில் மன்சூர் அலிகான் அடியும் வாங்கியிருக்கிறாராம். ஒரு சமயம் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருக்கும் போது மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் பிரச்சினை செய்கிறார் என்ற புகார் கேப்டன் காதுக்கு போக உடனே மன்சூர் அலிகானை வாங்கு வாங்கு என வாங்கினார் விஜயகாந்த்.
இதையும் படிங்க : வெறித்தனமாக களமிறங்கும் வேட்டையன்!.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்!.. சும்மா தெறி!…
இப்படி விஜயகாந்த் மீது மிகுந்த பற்று கொண்டவராகவே இன்றளவும் மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் தான் மன்சூர் அலிகான் முதன் முதலில் அறிமுகமானார்.
விஜயகாந்துக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். கேப்டன் பிரபாகரன் பட ப்ரிவியூ ஷோவை பார்க்க படக்குழுவுடன் பத்திரிக்கை நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
அப்போது தேவி தியேட்டரில் தான் படம் போடப்பட்டதாம். அந்த காலத்தில் தேவி தியேட்டருக்கு பக்கத்தில் இடம் காலிமனையாகத்தான் இருந்ததாம். அப்போது படம் பார்க்க வந்த அத்தனை நண்பர்களுக்கும் விஜயகாந்த் அந்த காலி மனை இடத்தில் ஒரு திடலாக அமைத்து பிரியாணி சாப்பாடு போட்டாராம்.
சாப்பாட்டு விஷயத்தில் விஜயகாந்த் ஒரு தெய்வம் என்பதை போல மன்சூர் அலிகான் பெருமையாக கூறினார். அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகானிடம் ஒரு ரசிகர் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று கேட்டார்.
இதையும் படிங்க : அஜித்னா யாரு? துரைமுருகன் கேட்டதற்கு பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? நிம்மதியை கெடுத்தவன சும்மா விடுவேனா?
அதற்கு மன்சூர் அலிகான் ‘கடைசியாக இல்லை. ஆனால் கிளிசரின் போடாமலேயே எனக்கு அழுக வரும் என ஒரு வினாடி அமைதியாக இருந்தவர் பொழ பொழவென கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.’ இப்படி நடிக்கும் போது அந்த தொழிலை தெய்வமாக நினைத்து பார்த்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று கூறினார்.