எகிப்து ராணி.. உனக்கு எதுக்கு தாவணி!.. மீன்களுடன் நீச்சல் அடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!.. ஜாலி டூர்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:29  )

விக்ரம் வேதா, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஞ்சி யாஞ்சி பாடலில் இடம்பெரும் நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே வரிகளைப் போலவே தனது நெஞ்சில் டேட்டூ குத்திக்கொண்டு ரசிகர்களின் பார்வையை வேறு எங்கும் செல்ல விடாமல் முடக்கி வைக்கும் அழகில் சொக்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கோகினூர் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இவர். கன்னடத்தில் வெளியான யூடர்ன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. காற்று வெளியிடை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதை வம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தனது விடுமுறை கொண்டாட எகிப்து நாட்டுக்கு பயணித்துள்ளார். அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளன.

தனது நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ தெரியும் அளவுக்கு மேலாடையை தாராளமாக அணிந்து போஸ் கொடுத்தும் நீச்சல் உடையில் மீன்களுக்கு நடுவே நீச்சல் அடிக்கும் வீடியோவையும் ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ளார். மம்மிகளை புதைத்துள்ள பிரமிடுகளுக்கும் சென்று அங்கேயும் போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழில் கலியுகம் மற்றும் ஆர்யான் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.


Next Story