யாரு கண்ணு பட்டுச்சோ… நல்லா இருந்த சீரியல் நாசமா போச்சு… அடுத்த ஆதிகுணசேகரனும் எஸ்கேப்பா!...

by amutha raja |
ethineechal serial
X

Ethirneechal Serial: சன் டிவியில் முன்னணியில் இருந்த சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் புகழ் இயக்குனர் திருச்செல்வம் இயக்குகின்றார். பெண் உரிமையை மையப்படுத்திய சீரியல் இது. இந்த சீரியல் ஒரு காலத்தில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்தது. இந்த சீரியலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கதாபாத்திரம் இந்த சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துதான்.

இவர் இருந்தவரை இந்த சீரியல் களைகட்டியது. ஆனால் சமீபத்தில் இவர் இறந்தபின் இந்த சீரியலின் டிஆர்பி குறைந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். இயக்குனர் கதையை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என தெரியாமல் நாடகத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல் கதையை நகர்த்தி செல்கிறார். ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாய் இருப்பார் என யோசித்த இயக்குனர் அக்கதாபாத்திரத்திற்கு நடிகர் வேலராம முர்த்தியை தேர்ந்தெடுத்தார்.

இதையும் வாசிங்க:அந்த விஷயத்துக்கு மட்டும் நா வெக்கபடவே மாட்டேன்… இவங்கதான் பிக்பாஸுக்கே தேவை… ஷகிலாவின் பளிச் டாக்…

இதற்காக வேலராமமூர்த்திக்கு இரு மடங்கு சம்பளமும் பேசப்பட்டது. இந்நிலையில் நாடகத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அவர் தென்பட்டார். ஆனால் அவரது நடிப்பில் போதுமான அளவு சுவாரஸ்யம் இல்லை என மக்கள் தங்களது கருத்தினை தெரிவித்தனர். இதனால் குழம்பிய நாடகக்குழு அவரை போலிசார் கைது செய்ததுபோல் ஒரு கதையை கொண்டுவந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபின் அவரை சீரியலில் காணவும் இல்லை. கதிர் மற்றும் ஞானம் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தால் அங்கு ஆதி குணசேகரன் இல்லை. ஆதி குணசேகரன் இல்லாமலே கதையை நகர்த்தும்படி தெரிகிறது. மேலும் கதிர் மற்றும் ஞானத்தை முதன்மை வில்லனாக காட்ட இயக்குனர் முயற்சி செய்வதாக இணையத்தில் தகவல்கள் உலாவுகின்றன.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!

இதுவரை மருமகள்களுக்கு சப்போர்ட் செய்த மாமியார் தற்போது அனைவருக்கும் எதிராக மாறியுள்ளார். நேற்றைய எபிசோடில் கனிகாவை ஜீவானந்தத்துடன் இணைத்து அவரது மாமியார் பேசுகிறார். கனிகாவிற்கு ஆதரவாக தர்ஷன் மற்றும் தர்ஷினி பாட்டியிடம் கோபப்படுகின்றனர். இப்போது உள்ள சூழ்நிலையில் இது கதைக்கு அவசியமில்லாததாகவும் தெரிகிறது.

ஆதிகுணசேகரனாக வந்த வேலராமமூர்த்தி தற்போது சீரியலில் காணாமல் போனது ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் இருக்குமா இல்லையா எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நாடகத்தை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் சற்று ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது என்றுதான் கூற வேண்டும்.

இதையும் வாசிங்க:வேலியில போற ஓணான இழுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையால இருக்கு… சும்மா இருந்த நெக்சனை வம்புக்கு இழுத்த பிரதீப்!…

Next Story