Cinema News
லைக்கா நிறுவனமாக இருந்தாலும் பாலிசில இருந்து மீறாத அஜித்! தடைகளை தாண்டி மீண்டும் கிளாஷாகும் பிரச்சினை
Vidamuyarchi: பல தடைகளை தாண்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விடாமுயற்சி படம் அக்டோபர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கின்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இந்தப் படத்தில் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார். அந்த வகையில் ஒரே நேரத்தில் விஜய், அஜித், கமல் என இவர்களுடன் ஜோடி சேரும் நடிகை என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் தாஸ் என ஒரு சில முக்கிய நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: எங்க இருந்துப்பா வந்தீங்க… திருவிளையாடல் பட பாடலுக்குபின் இவ்வளவு அர்த்தங்களா!…
அதாவது விடாமுயற்சி படத்திற்காக அஜித்துக்கு கொடுக்கப்படும் சம்பளம் 105 கோடியாம். அதில் 25 கோடியை முன்பணமாக பெற்றுக் கொண்டாராம் அஜித். மீதமுள்ள தொகையை மாத சம்பளமாக 5 கோடியாகத்தான் வாங்குவேன் என்ற பாலிசியை வைத்திருக்கிறாராம் அஜித்.
அது இந்தப் படத்திற்காக மட்டும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அஜித் இதைதான் பின்பற்றி வருகிறார். அதனால் அஜித்திடம் இருக்கும் நல்ல குணங்களில் இதுவும் ஒன்று என சொல்லப்படுகிறது. ஏன் முழுத் தொகையை வாங்க மறுக்கிறார் என்றால் ஒரு தயாரிப்பாளர் ஹீரோவுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் கொடுத்து விட்டு அதன் பிறகு படத்திற்கான செலவில் அந்த தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காக முன்பே மொத்த தொகையையும் வாங்க கூடாது என்ற ஒரு பாலிசியை கடைப்பிடித்து வருகிறாராம் அஜித்.
இதையும் படிங்க: இப்படி நின்னா எங்க பொழப்பு ஓடாது!. அந்த இடத்த அழகா காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி…
சரி இது சின்ன நிறுவனங்களுக்கு சரியாக இருக்கும். லைக்கா நிறுவனத்திற்குமா இப்படி ஒரு பாலிசியை கடைப்பிடிக்கிறார் என்றால் யாராக இருந்தாலும் அவர் கொண்ட கொள்கையில் மாறாதவராகத்தான் இருப்பாராம் அஜித்.
இது ஒரு பக்கம் இருக்க அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் விடாமுயற்சி ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மகிழ்திருமேனியை பொறுத்தவரைக்கும் செண்டிமெண்டுக்கு இடம் கொடுக்காதவராக இருப்பார்.
இதையும் படிங்க: கிரஷ் யார் வேணாலும் இருக்கலாம்! ஆனா இவங்கள மாதிரி இருக்கமுடியுமா? விஷாலின் அடுத்த ப்ரபோசல்
ஆனால் அஜித்தோ செண்டிமெண்ட் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என கேட்டு வாங்குபவர். இந்த விஷயத்தில் எப்படி இருவரும் எதிர்கொள்ள போகிறார்கள் என்பது ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவே கிட்டத்தட்ட 9 மாதங்களை கடந்து இப்பொழுதுதான் புத்துயிர் பெற்றிருக்கிறது. மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அஜித் படங்களை பார்க்க முடியாமல் போய்விடும் என்றும் கூறுகிறார்கள்.