ஒவ்வொரு பிறந்தநாளின் போது விஜயகாந்த் போகும் முதல் இடம்! தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்
Vijayakanth: நேற்று விஜயகாந்தின் பிறந்தநாள் அவருடைய சமாதியில் வைத்து கொண்டாடப்பட்டது. அவர் இறந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள். அதனால் அவருடைய சமாதியில் விஜயகாந்தின் சிலையை திறந்து வைத்து தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி ஆசிகளை பெற்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவா விஜயகாந்த் பற்றி சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது விஜய் மற்றும் சூர்யா இவர்களின் கெரியர் இந்த அளவு ஒரு உச்சத்தை அடைவதற்கு விஜயகாந்த் ஒரு காரணம் என டி சிவா கூறினார். ஏனெனில் சூர்யாவுக்கும் விஜய்க்கும் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் என்றால் அது செந்தூரப்பாண்டி மற்றும் பெரியண்ணா. இந்த இரு படங்களிலும் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை இந்த திரைப்படங்கள் பெற்றன .
இதையும் படிங்க: காதலனை மிரட்டிய மேகா ஆகாஷ்… இதனால்தான் இந்த திடீர் திருமண அறிவிப்பா?
அதன் பிறகு தான் சூர்யா மற்றும் விஜயின் கெரியர் வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் விஜயகாந்த் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த நேரம். அப்போது அனைவரும் ஏன் இந்த மாதிரி கேமியோ ரோலில் எல்லாம் நடிக்கிறீர்கள் என விஜயகாந்தை பார்த்து கேட்டார்களாம். அதற்கு விஜயகாந்த் ‘தனக்கான இடம் என்பது அப்படியே தான் இருக்கும்.
அதற்காக இளைஞர்களுக்கு வழி விடாமல் இருக்கக் கூடாது. அவர்களும் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும். காதல் சம்பந்தமான படங்களில் அவர்கள் தானே நடிக்க முடியும். இனிமேல் நானா நடிக்க முடியும்’ என்று கூறி அவர்களுக்காக நடித்த கொடுத்த படம் தான் அது என டி சிவா கூறினார். அதனால் விஜய் ஒரு பெரிய நன்றி கடன் பட்டவராக இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகையின் பாலியல் புகார்!.. ரியாஸ்கான் பதில் இதுதான்!.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!…
விஜயகாந்துக்கு டிரிபியூட் கொடுக்கும் ஒரு சூழலில் தான் விஜய் இருக்கிறார். அதனால் தான் கோட் திரைப்படத்தில் அதுவும் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தில் விஜயகாந்தை காட்டுவதால் வெங்கட்பிரபுக்கும் அர்ச்சனா கல்பாத்திக்கும் இது மிகப்பெரிய பெருமை என கூறினார் டி சிவா. மேலும் ஒவ்வொரு விஜயகாந்து பிறந்தநாளின் போதும் அவரை சந்திக்காமல் நான் இருந்ததே கிடையாது என்றும் சிவா கூறினார்.
அவருடைய பிறந்தநாள் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஒரு திருவிழாவைப் போலவே களைகட்டி விடும் என்றும் சிவா கூறினார். மேலும் விஜயகாந்த் தனது பிறந்த நாளின் போது முதல் வேலையாக திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பாராம். அதன் பிறகு ஏழை எளிய மக்களுக்கு தையல் மெஷின் வழங்குவது ஊனமுற்றவர்களுக்கு வண்டிகள் கொடுப்பது என அந்த வருட பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதுபோக அவருடைய பிறந்த நாளை கொண்டாட தமிழகத்திலிருந்து ஏராளமான பேர் கூடுவார்கள். அத்தனை பேருக்கும் அற்புதமான சாப்பாடு அங்கு காத்திருக்கும் என சிவா கூறினார்.
இதையும் படிங்க: இப்டி டிரெஸ் போட்டு மனச கெடுக்குறாரே மாளவிகா!.. சீயானும் செம ஸ்டைலா இருக்காரே!…