என்ன ஒரே ரைமிங்கா இருக்கு!... வடிவேலு - ஃபகத் பாசில் படத்தின் டைட்டில் இதானா?

Vadivelu: காமெடி நடிகராக இருந்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் குணசித்திர நடிகராக தேர்வானார். தற்போது அவர் நடிப்பில் உருவாக இருக்கும் முக்கிய படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களே ஆச்சரியப்பட்டு உள்ளனர்.
தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர் வடிவேலு. அவர் படத்தில் இருந்தாலே அது ஹிட் என்ற நிலைமை இருந்தது. ஒரு கட்டத்தில் அவரின் வாயே அவருக்கு வினையாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் திரும்பி கோலிவுட் வந்தார்.
இதையும் படிங்க: ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போற அளவுக்கு என்ன நடந்தது? ஃபோட்டோ போட்டு ஷாக் கொடுத்த அருண்விஜய்
படம் நல்ல ரீச்சை கொடுக்கவில்லை. பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய வேடம் ஏற்றார். படத்தில் கொஞ்சம் கூட சிரிக்காமல் அவர் நடிப்பை பார்த்தவர்கள் பிரமித்தனர். இந்த ஹிட் அவரின் திரை கேரியரில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. தொடர்ந்து அவருக்கு குணசித்திர வேடங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98வது படமாக உருவாகும் இப்படத்தினை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவுடன் ஃபகத் பாசில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். இப்படம் ஒரு சாலை பயணத்தில் நடக்க இருக்கும் கதை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்ப பாரு பொய் பேசும் திரை நட்சத்திரங்கள்!.. ரசிகர்களை காக்கா பிடிக்க அதையே செய்யும் விஷால்!..
