Cinema News
ஒரு டிக்கெட்டுக்கு 23 படம் காட்டுறாரு!. ஏன் அட்லியை திட்றீங்க!?.. ட்ரோல் ஆகும் வைரல் வீடியோ!..
Jawa ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லி. இவர் ஷங்கரின் உதவியாளர். ஷங்கரிடம் பாடம் படித்தவர் என்பதால் பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுப்பார். ஆனால், ஷங்கரை போல் சொந்தமாக கதையை உருவாக்க மாட்டார். ஏற்கனவே வெற்றிபெற்ற பழைய படங்களிலிலுருந்து காட்சிகளை உருவி திரைக்கதை அமைத்து விடுவார்.
அதை மாஸ் ஹீரோக்களை வைத்து விதவிதமான கேமரா கோணங்களில் ரிச்சாக காட்டும்போது ரசிகர்களுக்கும் பிடித்துவிடும். அதாவது, ஏற்கனவே பார்த்த படம் போலவே இருக்கிறது என்கிற உணர்வு வந்தாலும் அதை ரசிகர்களுக்கு பிடிக்கும்படி செய்துவிடுவார். இதுதான் அட்லியின் மேஜிக். இப்படித்தான் அவரின் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஜெயிலர், பதானை தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண ஜவான்!.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!..
மௌன ராகத்தை வைத்து ராஜா ராணி, சத்ரியனை வைத்து தெறி, அபூர்வ சகோதரர்களை வைத்து மெர்சல், ஷாருக்கானின் சக் தே இண்டியா மற்றும் சில ஆங்கில படங்களை உருவி பிகில் என இயக்கினார். அட்லி காப்பி அடித்து படங்களை எடுக்கிறார் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பல வருடங்களாக ட்ரோல் செய்தாலும் அவர் அதை கண்டுகொள்வதில்லை. இதுதான் என் ஸ்டைல் என படங்களை இயக்கி வருகிறார்.
இப்போது பாலிவுட் சென்று ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் நேற்று உலகமெங்கும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மற்ற மாநில ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் படம் பார்க்கும்போது ‘ஏற்கனவே இந்த காட்சியை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே’ என அலாரம் அடிப்பதை தவிர்க்கமுடியவில்லை.
இதையும் படிங்க: அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ – இதுல கோட்ட விட்டீங்களே
அந்த அளவுக்கு பல படங்களின் காட்சியை வைத்து உப்புமா கிண்டியுள்ளார் அட்லீ. ஆனால், ஷாருக்கான், செண்டிமெண்ட் காட்சிகள், ரிச் லுக், அதிரடி சண்டை காட்சிகள், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற சில காரணங்கள் நம்ம ஊர் ரசிகர்களுக்கும் ‘இப்படம் ஓகே’ என சொல்ல வைத்துவிட்டது.
இந்நிலையில், தியேட்டரை விட்டு படம் பார்த்துவிட்டு வந்த இரண்டு பேர் ஜவான் படம் பற்றி பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடித்த உன்னை கொடு என்னை தருவேன் முதல் ஜெயிலர் வரை அனைத்து படங்களின் காட்சியும் இதில் இருக்கிறது. ஒரு டிக்கெட்டுக்கு ஒரு படம் காட்டுவார்கள். ஆனால், அட்லி 23 படங்களை காட்டியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என அவர்கள் கலாய்த்து பேசுவது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.