Connect with us

Cinema News

ஜெயிலர், பதானை தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண ஜவான்!.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!..

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பிற்கு எப்படி நன்றி செலுத்துவேன் என்று தெரியவில்லை என்றும் உங்க அன்புக்கு நான் நிச்சயம் அன்பு செலுத்துவேன் என நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்று காலை ஆரம்பித்த ட்விட்டர் ட்ரெண்டிங் இன்றும் ஓயாமல் இந்திய அளவில் தெறிக்க விட்டு வருகிறது.

இதையும் படிங்க: கல்யாணம்தான் பண்ண முடியல! என் அப்பா சொன்ன வார்த்தை – ஜெமினியை பற்றி வெண்ணிறாடை நிர்மலா பகிர்ந்த சீக்ரெட்

சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என இரண்டையும் ஒரே நாளில் அடித்து துவம்சம் செய்துள்ளது ஜவான் என கூறுகின்றனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான பதான் திரைப்படம் முதல் நாளில் 65 கோடி ரூபாயை இந்திய அளவில் வசூல் செய்திருந்தது.

இதையும் படிங்க: கவினுக்கு ஜோடி அந்த கில்மா நடிகையா!.. இப்போ தானே கல்யாணம் ஆச்சு!.. மனைவி கொஞ்சம் உஷாரா இருக்கணும்!..

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் நேற்று வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 75 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி உலக அளவில் ஜவான் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாயை தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 140 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக அட்டகாசமான அப்டேட்கள் குவிந்துள்ளன.

இதையும் படிங்க: அடடே அவங்களா!.. ஜவான் படத்தில் நயன்தாரா குரலை கெடுக்காம பார்த்துக் கொண்ட அட்லீ!..

பாலிவுட்டின் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை பார்த்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். முதல் வார முடிவிலேயே எத்தனை படங்களின் ரெக்கார்டுகளை ஜவான் முறியடிக்கப் போகிறதோ தெரியவில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top