கவர்னரிடமே கெத்து காட்டிய கமலின் அப்பா!.. விதையே அவர் போட்டதுதான்!.. செம மேட்டரு!..

களத்தூர் கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். 5 வயது சிறுவனாக அப்படத்தில் நடித்தார் கமல், துருதுருவென இருந்த கமலின் நடவடிக்கை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிடித்துப்போனதால் அந்த வேடத்தில் நடிக்கவிருந்து வேறு சிறுவனை தூக்கிவிட்டு அப்படத்தில் கமலை நடிக்க வைத்தார்.
அவரின் கணிப்பு வீண்போகவில்லை. தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்களிலும் சிறுவனாக நடித்தார் கமல்ஹசன். வாலிப வயதில் கமலை தூக்கிவிட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். அதற்கு உதவி செய்தவர் நடிகர் ஜெமினி கணேசன். அவர்தான் கமலை பாலச்சந்தரிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்து ‘இவனை வளர்த்துவிடுங்கள்’ என சொன்னது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..
அதன்பின் பாலசந்தரின் இயக்கத்தில் பல படங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை கமல் நிரூபித்தார். 80களில் ரஜினிக்கு போட்டி நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு என அசத்தினார் கமல், அவருக்கென ரசிகர் கூட்டம் உருவானது. வித்தியாசமான கதைகள், பரிசோதனை முயற்சி என சினிமாவில் கமல் செய்ததை எந்த நடிகராலும் செய்யவே முடியது என சொல்லுமளவுக்கு சாதித்து காட்டியிருக்கிறார் கமல்.
எந்த கேள்வி கேட்டாலும் சாமார்த்தியமாக கமல் பதில் சொல்வார். அதற்கான விதை அவரின் அப்பா போட்டது என்பது பலருக்கும் தெரியாது. கமலின் அப்பா சீனிவாசன் பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்தவர். எனவே, பேசுவது எப்படி என அவருக்கு சொல்லி தர தேவையில்லை. பகுத்தறிவு மற்றும் முற்போக்குவாதியும் கூட. அதனல்தான் ஐயங்காராக இருந்தும் யாஹூப் ஹாசன் என்கிற இஸ்லாமியரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர்டா… விஜய்க்கே ஆப்படித்த கமல்ஹாசன்… போடு மாஸ்…
குருவின் மீதிருந்த பற்றில்தான் தனது மகன்கள் மூவருக்கும் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் என பெயர் வைத்தார். 1982 முதல் 88 வரை தமிழகத்தின் ஆளுனராக இருந்தவர் சுந்தர் லால் குரானா. ஒருமுறை இவரை சந்திப்பதற்காக ஒரு வழக்கறிஞர்கள் குழு சென்றிருந்தது. அதில் சீனிவாசனும் இருந்தார். ஆளுநரிடம் ‘நான் வழக்கறிஞர் சீனிவாசன். பரமக்குடியை சேர்ந்தவன்’ என அறிமுகம் செய்து கொண்டார்
அப்போது அருகில் இருந்தவர் ஆளுநரிடம் இவர் நடிகர் கமலின் அப்பா என சொல்லா ஆளுனர் ‘ஓ நீங்கள் கமல்ஹாசனின் அப்பாவா?’ என ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு உடனே ‘இல்லை. அவர் என் மகன்’ என பதில் சொன்னார் சீனிவாசன்.