Connect with us
abbas

Cinema News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளர் இவர்தான்..ஓஹோ அதுக்கு தான் வந்தாரா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்போகிறது. இனிமே அதை பற்றி தான் ஊர் முழுவதும் பேச்சு இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கப்போவது யார்? என்னவெல்லாம் நடக்க போகிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.

இதையும் படிங்க- கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..

இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் யார் என்ற விபரம் கசிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

நடிகர் அப்பாஸ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்று கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருந்த போது, அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கமலிடம் இருந்து அழைப்பு வந்ததாக அவர் கூறியிருந்தார். அப்போது, குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இப்போது மீண்டும் தமிழகம் வந்திருக்கும் அவர், இனி நடிக்கப்போவதாகவும், தன் லட்சியத்திற்காக தான் திரும்பி வந்துள்ளேன் என்றும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க- பிக் பாஸ் சீசன் 7க்கு ரெடியான நெல்சன் பட நடிகை!.. பெட்டில் சும்மா என்னம்மா சூடா இருக்காரு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top