Cinema History
இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…
Kamal: சினிமாவில் ஹீரோ வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். படம் தயாரிக்க கடன் கொடுக்கும் ஃபைனான்சியர் முதல் படத்தை வாங்கும் வினியோகஸ்தர் வரை யார் ஹீரோ என்பதில் அவர்களுக்கு முடிவிருக்கும். ஹீரோ பிடிக்கவில்லை எனில் ஃபைனான்சியர் பணம் கொடுக்க மாட்டார்.
அதேபோல், வினியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். பாலா இயக்கிய முதல் படமான சேதுவுக்கே இது நடந்தது. வினியோகஸ்தர்களுக்கு மட்டும் 100 முறை படத்தை போட்டு காட்டினார் பாலா. ஆனால், யாரும் வாங்கவில்லை. அதன்பின்னர்தான் தயாரிப்பாளரே சொந்தமாக இப்படத்தை வெளியிட்டார்.
இதையும் படிங்க: கமல் படம் தேறுமா தேறாதா? அஜித்தை வைச்சு டெஸ்ட் பண்ண இயக்குனர்.. கடைசியில் ரிசல்ட்?
இது கமலுக்கும் நடந்துள்ளது. 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்த கமல் அதன்பின் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, ஆனந்த ஜோதி என சில படங்களில் நடித்தார். அதன்பின் 12 வயதுக்கு மேல் அவரால் சிறுவனாக நடிக்க முடியவில்லை. எனவே, தங்கப்பன் எனும் நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார்.
நடிகர்களுக்கு நடன அசைவுகள் சொல்லிக்கொடுப்பது கமலின் வேலை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்தவர்தான் கமல். அப்படி சில படங்களில் அப்போது அவருக்கு பழக்கப்பட்டவர் ஆர்.சி.சக்தி. அப்போது ஆர்.சி.சக்தி உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..
ஒருகட்டத்தில் ‘உணர்ச்சி’ என்கிற படத்தை எடுக்க அவர் திட்டமிட்டார். கமலை அழைத்து ‘நீதான் இந்த படத்தின் ஹீரோ.. அதுமட்டமல்ல இந்த படத்தின் கதையை என்னோடு சேர்ந்து நீயும் எழுது’ என சொன்னார். கமலை முதலில் நம்பியவர் அவர்தான். உணர்ச்சி படத்தில் கமல், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
5 ஆயிரம் அடி படம் எடுத்தவுடன் மீது படமெடுக்க ஆர்.சி.சக்தியிடம் பணம் இல்லை. எனவே, ஒரு ஃபைனான்சியரிடம் சென்று பணம் கேட்டார். எடுத்த வரை படத்தை பார்க்க அவர் ஆசைப்பட்டதால் அவருக்கு படத்தை போட்டு காட்டினார் ஆர்.சி.சக்தி. படத்தை பார்த்த அந்த ஃபைனான்சியர் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால், இதை அப்படியே தூக்கி வைத்துவிடுங்கள். கமல்ஹாசனையும் தூக்கிவிடுங்கள். இதே கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து நாம் எடுப்போம்’ என சொன்னார்.
ஆனால், ஆர்.சி.சக்தி அதற்கு சம்மதிக்கவில்லை. வேறு ஒரு ஃபைனான்சியர் மூலம் படத்தை எடுத்து முடித்தார். அதன்பின் 10 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலுக்கு மிகவும் நெருக்கமான, நம்பகத்தன்மை உடையவராக இருந்தவர்தான் ஆர்.சி.சக்தி. தன் அம்மா இறந்தபோது ஆர்.சி.சக்தியையும் அழைத்து ‘என் அம்மாவுக்கு நீங்களும் மகன்தான். நீங்களும் கொள்ளியில் கை வையுங்கள்’ என கமல் சொன்னார் எனில் அவர் கமலின் மனதுக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: கமல் நெப்போலியன் வேஷத்துல நடிச்சாரா? குழப்பிய மா.கா.பா!… ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கலாய் சம்பவம்