Categories: latest news

மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? செமையா இருந்து இருக்குமே!

Mookuthi Amman: அம்மன் படங்களில் வித்தியாசமாக வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாராவுக்கு முன்னர் நடிக்க இருந்த முன்னணி நடிகை குறித்த ஆச்சரிய தகவல்களை ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பாலிவுட்டின் பிகே படத்தினை மனதில் வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன்.

இதையும் படிங்க: சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..

இப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருப்பார். ஆனால் இந்த ரோலுக்கு முதலில் ஆர்.ஜே பாலாஜி இப்படத்தில் நேரடியாக நயன்தாராவை நடிக்க வைக்கவில்லையாம். ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்னர் இப்படத்தில் தனக்கான அடையாளத்தினை உருவாக்க எண்ணினார். ஆனால் டிராமாட்டிக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையை மையப்படுத்த எண்ணினாராம். 

இப்படத்தில் டான்ஸ ஆட கூடாது, பாட்டு பாடக்கூடாது, காதல் செய்ய கூடாது என முடிவெடுத்தாராம். ஆனால் ஹீரோயின் தேவைப்படும் என்பதால் அவர்கள் ரோலை கண்ணியமாக இருக்க வேண்டும். அடுத்து சென்னையில் நடக்கும் கதையாக இல்லாமல் மொத்த தமிழ்நாடும் விரும்பும்படி இருக்க வேண்டும் என்பதால் லால்குடியில் இந்த படத்தினை இயக்கி இருந்தனர். அரசியல் பேசியதுக்கு காரணம். அந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய அரசியல் எண்ணத்தினை வைக்க எண்ணினார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு

ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டதால் அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டாராம். இதை தொடர்ந்தே நயனிடம் பேசும்போது அவர் உடனே நடிக்க ஒப்புக்கொண்டு அந்த ரோலில் நடித்து ஹிட்டடித்ததாக கூறப்படுகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago