‘வின்னர்’ படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின்! திடீரென நடந்த ட்விஸ்ட்.. சுந்தர் சி பகிர்ந்த சீக்ரெட்

by Rohini |   ( Updated:2024-04-30 08:18:10  )
sundar
X

sundar

Winner Movie: தமிழ் சினிமாவில் ஒரு படத்தை காமெடியாகவும் கமர்சியலாகவும் எடுத்து மக்களை சிரிக்க வைப்பவர் இயக்குனர் சுந்தர் சி. அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் அனைவரையுமே சிரிக்க வைத்திருக்கும் படங்களாகவே அமைந்திருக்கின்றன. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் போன்ற படங்கள் சுந்தர் சி யின் கரியரில் மிகவும் திருப்பமுனையாக அமைந்த படங்களாகும்.

அந்த வகையில் அவருடைய ‘வின்னர்’ திரைப்படத்தையும் குறிப்பிடலாம். அவருடைய படங்களில் காமெடிக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர்சி. ஹியூமராக கொண்டு செல்வதில் மிகச் சிறந்த இயக்குனர். அந்த வகையில் வின்னர் திரைப்படம் வடிவேலுவின் நகைச்சுவைக்கு மிகவும் பேர் போன திரைப்படம். அதில் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடி காட்சிக்கு இன்றுவரை ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

இதையும் படிங்க: பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.

அந்த படத்தில் பிரசாந்த், கிரண் நடிக்க அவர்களுடன் சேர்ந்து பல முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர். பிரசாந்த் நடிப்பில் கடைசியாக மிகவும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக வின்னர் திரைப்படம் அமைந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் கிரண் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்படவில்லையாம். இந்த படத்தில் வரும் மத்தாப்பூ சேலைக்காரி என்ற பாடலில் ஆரம்பத்தில் சிவப்பு நிற ஆடையில் ஒரு நடிகை ஆடிக்கொண்டே வருவார்.

win

win

அவர்தான் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்தாராம். முதல் கட்ட படப்பிடிப்பு வரைக்கும் வந்த அந்த நடிகை இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பின் போது வராமல் இருந்து விட்டாராம். அந்த நேரத்தில் ஜெமினி படத்தின் மூலம் கிரண் மிகவும் பிரபலமானதால் சுந்தர் சி கிரனை இந்த படத்தின் மூலம் கதாநாயகி ஆக்கி இருக்கிறார். ஆனால் அந்த படத்தின் காட்சிகள் கிரணை வைத்து எடுக்கும் போது சென்னையில் வைத்தும் பிரசாந்தை வைத்தெடுக்கும் போது ஹைதராபாத்தில் வைத்தும் எடுத்திருக்கிறார்கள். பாடலில் இரண்டு காட்சிகளையும் எடிட்டிங் மூலம் ஒன்று சேர்த்து இணைத்து இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தின் உண்மையான நீலவேணி கிரண் இல்லை. அது அந்த நடிகை என்று சுந்தர் சி கூறினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

Next Story