விஜயால் அந்த ஒரு பெருமைக்கு ஆளான சூப்பர் குட் பிலிம்ஸ்! எல்லாம் அந்த பாடல் செய்த மேஜிக்

Actor Vijay: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகி அடுத்து அரசியலில் கால்பதித்து பரபரப்பாக பேசப்படுபவர் தளபதி விஜய். மக்களின் நலனுக்காக கோலிவுட்டில் பிக்கில் இருந்தாலும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி இப்போது அரசியலில் இறங்கியிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கு முதற்படியாக கள்ளக்குறிச்சி சம்பவத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய். அதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார். ஒரு பக்கம் சினிமாவிலும் பிஸியாக இருந்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: இது அது இல்ல!.. கோட் படத்தோட செகண்ட் சிங்கிள் சூர்யா படத்தோட காப்பியா?.. முடிச்சிவிட்ட ஃபேன்ஸ்!..

ஆரம்பக்காலங்களில் விஜயின் படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். மேலும் செண்டிமெண்ட் கலந்த குடும்ப கதைகளாகவும் அமைந்திருக்கும். இதனாலேயே குடும்ப குடும்பமாக விஜயின் படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால் சமீபகாலமாக விஜயின் படங்கள் பக்கா கமெர்ஷியல் பேக்கேஜாக ஆக்‌ஷன் கலந்த சண்டை காட்சிகளாகவே இருப்பதால் இளைஞர்களை மொத்தமாக தன் பக்கம் இழுத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய் நடித்த ஷாஜகான் படம் குறித்து அந்தப் படத்தின் இயக்குனரான ரவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சல்யூட் போட வச்ச தம்பதி.. கோலிவுட்டிலேயே இவங்கதான் ஃபர்ஸ்ட்.. மாஸ் காட்டிய சினேகா பிரசன்னா

ஷாஜகான் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. காதலை மையப்படுத்தி வெளியான அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்களுக்கு பாடல்வரி எழுதியவர் வைரமுத்து.

அந்தப் படத்தில் ‘மெல்லினமே மெல்லினமே’ என்ற பாடம் இன்று வரை காதலர்களின் ஒரு தேசியகீதமாகவே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்தப் பாடல் காட்சிகள் நியுஸிலாந்தில்தான் படமாக்கப்பட்டதாம். அதனால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக முதன் முதலில் ஒரு பாடல் காட்சியை வெளி நாட்டில் படமாக்கியது என்றால் இந்தப் பாடலுக்காகத்தான் என இயக்குனர் ரவி கூறினார்.

இதையும் படிங்க:இன்னைக்கு நைட் யாரும் தூங்கிடாதீங்க!.. கோட் டீசர் க்ளிம்ப்ஸ் வருது!.. அர்ச்சனா கல்பாத்தி அடிபொலி!..

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it