சல்யூட் போட வச்ச தம்பதி.. கோலிவுட்டிலேயே இவங்கதான் ஃபர்ஸ்ட்.. மாஸ் காட்டிய சினேகா பிரசன்னா

Prasanna Sneha: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் 2001ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமானார் சினேகா. அதற்கு முன்பாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறையில் முதன் முதலில் அடி எடுத்து வைத்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்து வருகிறார். குடும்ப பங்கான முகத்தோற்றம் பார்த்தவுடனே பிடிக்கும் அளவுக்கு இவருடைய முகம் என ரசிகர்கள் மனதில் சட்டன பதிந்து விடுவார் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ஜெயிச்சுட்டா உங்கள வந்து சந்திப்பேன்.. அஜித்திடம் சவால் விட்ட நடிகர்! கடைசில என்னாச்சு தெரியுமா?

இப்போது இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். தனது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வரும் சினேகா பிரசன்னா அவரவர் தெரியரில் பிசியாக நடித்து வருகிறார்கள். சினேகா தற்போது விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுவும் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து நடிக்கிறார் .

அதனால் இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .கோலிவுட்டில் ஒரு கியூட் தம்பதியாக வலம் வருகிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும் .இடையிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அதெல்லாம் பொய் வெறும் வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இதையும் படிங்க: ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?

அவ்வப்போது இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது பொது இடங்களுக்கு செல்வது போன்றவைகளால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். சினேகா ‘சினேகாலயா’ என்ற பெயரில் ஒரு ஜவுளிக் கடையை நடத்தி வருகிறார். அந்த கடை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் சேர்ந்து செய்த ஒரு செயல் ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினேகா பிரசன்னா தம்பதி மட்டும்தான் சேர்ந்து உடல் உறுப்பு தானத்தை செய்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: விஜயை பத்தி பேசினா ‘மூடிட்டுப் போ’ன்னு சொல்லுவாரு அஜித்!.. ரகசியத்தை பகிர்ந்த நடிகர்!..

அதற்கு முன்பு வரை எந்த ஒரு நட்சத்திர தம்பதியும் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்யவில்லை. இவர்கள் இருவரும் தான் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்ததாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் வெளியானதிலிருந்து சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 

Related Articles

Next Story