இன்னைக்கு நைட் யாரும் தூங்கிடாதீங்க!.. கோட் டீசர் க்ளிம்ப்ஸ் வருது!.. அர்ச்சனா கல்பாத்தி அடிபொலி!..

அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் இருவரும் கோட் படத்தில் பைக் ஓட்டும் அந்த வெறித்தனமான ஸ்டண்ட் காட்சியின் ஷாட்ஸ் வீடியோவை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப் போவதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், களையிலிருந்து காணப்படுகிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் மெலடி பாடல் என்பதால் தளபதி ரசிகர்கள் உற்சாகம் அடையவில்லை.

இதையும் படிங்க: ஜெயிச்சுட்டா உங்கள வந்து சந்திப்பேன்.. அஜித்திடம் சவால் விட்ட நடிகர்! கடைசில என்னாச்சு தெரியுமா?

வெறித்தனமாக விஜய் தரிசனம் கிடைத்தால் மட்டுமே தளபதி ரசிகர்கள் ஹாப்பி ஆவார்கள் என்பதை அறிந்து கொண்ட அர்ச்சனா கல்பாத்தி சார்பாக நள்ளிரவு 12.01க்கு கோட் படத்தின் ஷாட்ஸ் வீடியோ வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இனிமேல் தான் ஆட்டம் ஸ்டார்ட் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் ஹாஷ்டேக்குகளை லெவலில் வைரலாகி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்தார்.

இதையும் படிங்க: ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?

நடிகர் விஜய்க்கு 50 வயது ஆகவுள்ள நிலையில், தளபதி 69 படம் வரை அவர் நடிப்பார் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தற்போது அட்டகாசமான அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல் படத்திலிருந்து விஜய் எப்படி எல்லாம் போராடி 69 படங்கள் வரை வருகிறார் என்பதும் 69-வது படத்திற்கு பிறகு மீண்டும் கீழே விழுந்து முதல் அடியாக அரியணையை நோக்கி நகர்கிறார் என்பதையும் குறிப்பிடும் வகையில் அந்த வீடியோ உருவாகியுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6:00 மணிக்கு கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியும் மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் குரலை டெக்னாலஜி மூலம் உயிர்பிக்க செய்து அந்த பாடலை யுவன் சங்கர் ராஜா உருவாக்கியுள்ளார். நடிகர் விஜய்யும் அந்த பாடலை உடன் இணைந்து பாடியுள்ளார்.

இதையும் படிங்க: வில்லன்கள் தான் நல்லது செய்வாங்களாம்… உலகநாயகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?

 

Related Articles

Next Story