அஜித் நடித்து டிராப் ஆன 10 திரைப்படங்கள்!.. அதில் யாரெல்லாம் நடிச்சாங்க தெரியுமா?...

Ajithkumar: திரையுலகில் ஒரு நடிகரை வைத்து ஒரு படம் துவங்கி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே சில படங்கள் டிராப் ஆகுவதும், படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து படம் டிராப் ஆவதும் நிறைய நடந்துள்ளது. அந்தவரிசையில் அஜித் நடிப்பில் படம் துவங்கப்பட்டு டிராப் ஆன 10 படங்கள் பற்றி பார்ப்போம்.
வாலியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் அஜித் - ஜோதிகா இணைந்து நடிப்பதாக சொல்லி நியூ படம் 2000ம் வருடம் அறிவிக்கப்பட்டது. போஸ்டரெல்லாம் வெளியானபின் படம் நிறுத்தப்பட்டது. அதன்பின் அந்த கதையில் எஸ்.ஜே.சூர்யாவே ஹீரோவாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்தார்.
பாலாவின் இயக்கத்தில் நந்தா படத்திலேயே அஜித் நடிப்பதாக சொல்லி போஸ்டர்களும் வெளியானது. ஆனால், அந்த போஸ்டர் உண்மைதான என்பது கண்டுபிடிக்கமுடியவில்லை. நந்தா படத்தில் சூர்யா நடித்து அவருக்கு அது முக்கிய படமாக அமைந்தது. அஜித் ரசிகர்கள் பொய்யாக இந்த போஸ்டரை உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிட்டிசன் படத்திற்கு பின் சரவண சுப்பையா இயக்கத்தில் இதிகாசம் என்கிற சரித்திர படம் உருவாகவிருந்து போஸ்டரும் வெளியானது. ஆனால் டிராப் ஆகிவிட்டது. காதல் மன்னன், அமர்க்களம் படங்களின் வெற்றிக்கு பின் இயக்குனர் சரணோடு அஜித் 3வதாக இணைகிறார் என அறிவிக்கப்பட்டு ஏறுமுகம் என்கிற படம் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
2002ம் வருடம் அறிவிக்கப்பட்ட திரைப்படம் மஹா. அஜித் முதன்முறையாக போலீசாக நடித்த படம் இது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து படம் கைவிடப்பட்டது. ஜனா படத்திற்கு முன்பே ஷாஜி கைலாசுடன் இணைந்து அஜித் நடிப்பதாக இருந்த படம்தான் திருடா. 2004ம் வருடம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், அது டிராப் ஆகிவிட இருவரும் ஜனா என்கிற படத்தில் இணைந்தார்கள்.
வில்லன், வரலாறு என இரண்டு ஹிட்டுகளுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமாரும், அஜித்தும் 3வதாக இணைந்த படம்தான் காங்கேயன். வால்வரின் பட லுக்கில் அஜித்துக்கு கெட்டப்பெல்லாம் போட்டு போஸ்டர் வெளியானது. ஆனால், சில காரணங்களால் படம் செல்ப் எடுக்கவில்லை. பாலாவின் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்து அவர் விலகிவிட அவருக்கு பதில் ஆர்யா நடித்த படம்தான் நான் கடவுள்.
தீனா வெற்றிக்கு பின் முருகதாஸும் அஜித்தும் இணைந்து மிரட்டல் என்கிற படம் உருவானது. அஜித்தும், அசினும் நடிப்பதாக இருந்த இந்த படம் கைவிடப்பட்டது. இந்த கதையைத்தான் சூர்யாவை வைத்து கஜினி என்கிற தலைப்பில் முருகதாஸ் படமாக எடுத்தார் என சொல்கிறார்கள். அந்த கோபத்தில்தான் அதன்பின் முருகதாஸுக்கு அஜித் கால்ஷீட் கொடுக்கவே இல்லை.
வஸந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் அஜித் சில நாட்கள் நடித்துவிட்டு விலகிவிட அவருக்கு பதில் சூர்யா அந்த படத்தில் நடித்தார். அதுதான் சூர்யாவின் அறிமுக படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க ரெட்ட தல என்கிற படமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை.