என்னது எம்ஜிஆர் வில்லனோட வீட்டைப் பிடுங்கினாரா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?

பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் எம்ஜிஆர், அசோகன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
என்னுடைய திராவிட இயக்கப் பற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அசோகன். சேலத்துக்காரர்தான். அவ்வையார் படத்துல ஒரு காட்சியில நடிச்சாரு. அதுதான் அவரது முதல் படம்னு நினைக்கிறேன். ரொம்ப நெருக்கமானவர். எம்ஜிஆர் அசோகனுக்காகப் பொருளாளர் பதவியை வச்சிருந்தாரு. உனக்குத்தான் அந்தப் பதவி. நீ வந்தே ஆகணும்னாரு.
சொந்தத் தயாரிப்பு: நேற்று இன்று நாளை படம் எடுத்துக்கிட்டு இருக்காரு. சொந்தத் தயாரிப்பு. அசோகனுக்கு அதுதான் முதல் படம். அப்போ அவரைப் பார்க்கப் போறேன். வெளியில எல்லாம் போலீஸ் நிக்கிறாங்க. என்னைப் பார்த்ததும் 'வாடா வாடான்னு அழைச்சி காபி சாப்பிடு'ன்னு ஆர்டர் பண்றாரு. 'உன்னைத் தான் பார்க்கணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நீயே வந்துட்ட'ன்னாரு.
என்ன ஒரே போலீஸ்னு கேட்டேன். 'ஜப்திக்கு அனுப்பிச்சிருக்காங்களா'ன்னு கேட்கிறார். அப்புறம் எம்ஜிஆர் பேரைச் சொல்லல. அப்புறம் அது என்னமோ ஆகிப்போச்சு. அவரே ஆக்ஷன் எடுக்காம விட்டுட்டுப் போயிட்டாரு. அந்த நேரத்துல நடன இயக்குனர் சலீம் உள்ளே வர்றாரு. அவர் ஒரு மலையாளி. 'காட்டிட்டான் பார்த்தீங்களா புத்தியை? உங்கிட்ட சொன்னேன்ல. அவன் நல்ல ஆளு இல்லன்னு கேட்டியா?'னு சொல்றாரு.
வீடு ஜப்தி: அவருதான் நேற்று இன்று நாளை படத்துக்கு டான்ஸ் மாஸ்டர். அப்புறம் என்னைப் பார்த்தாரு. அசோகன். நீங்க போங்க அண்னேன்னாரு. இல்ல கஷ்டமா இருக்கு. பார்த்துட்டுப் போறேன்னு சொன்னேன். 2 மணி நேரம் பக்கத்துல இருந்து பார்த்தேன். வீட்டை ஜப்தி பண்ணிட்டு வந்து நிக்கிறாங்க. இவரோட ரசிகன் எவனாவது அடிச்சிடப் போறான்னு சொல்லிப் போலீஸ் பாதுகாப்போடு வந்தாங்க.
என்னவோ ஒரு எண்ணம் வந்து செட்டில் பண்ணிட்டாங்க. அதைக் கண்ணாலப் பார்த்தேன். அப்படி பழி வாங்கணும்கற எண்ணம் வந்ததுக்கு அடிப்படைக் காரணம் கட்சியில சேரல என்பது எல்லாம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்கண்ட பேட்டியில் அவர் எந்த விவரத்தையும் தெளிவாகச் சொல்லவில்லை.
நம்பும்படி இல்லை: இதைப் பார்த்த நெட்டிசன்கள் அசோகன் மகனே நீங்க சொல்ற மாதிரி இல்லைன்னு சொல்லிவிட்டார் என்றனர். இன்னொருவர் டாக்டர் ஒரு அளவுக்குத் தான் பொய் சொல்லலாம். ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது என்று சாடியுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத நிலையில் அவர்களைப் பற்றி பேசுவது முழுமையாக நம்பும்படி இல்லை என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொருவர் அசோகன் சார் மகனே எம்ஜிஆர் தான் எங்களுக்கு உதவி செய்துள்ளார் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.