எம்ஜிஆர் படத்தைக் கண்டுகொள்ளாத இயக்குனர்... கொந்தளித்து ரசிகர்கள் செய்த காரியத்தைப் பாருங்க...!

இயக்குனர்களின் திலகம் என்று அழைக்கப்பட்டவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் கமல், சிவக்குமார் இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுத்தார். இந்தப் படத்துக்கு முன் இவர் அதை எம்ஜிஆரை வைத்துத்தான் எடுப்பதாக இருந்ததாம். அந்தவகையில் இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் அவர் பேசியது எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. அது என்னன்னு பார்க்கலாமா...
தங்கத்திலே வைரம்: தமிழில் தங்கத்திலே வைரம் என்ற ஒரு படம் வெளியானது. அதில் கமல், சிவக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இந்தப் படத்துக்குக் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இயக்குனர் திலகம் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் அந்தப் படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தேர்த்திருவிழா: அந்த அறிவிப்பு வெளியாக ஒரு முக்கிய காரணம் உள்ளது. கேஎஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது பணமா, பாசமா? ஜெமினிகணேசனும், சரோஜாதேவியும் ஜோடியாக நடித்த படம். அந்தப் படம் வெளியான அதே நாளில் வெளியான எம்ஜிஆர் படம் தேர்த்திருவிழா. இந்தப் படத்தில் ஜோடி ஜெயலலிதா.
பணமா, பாசமா படத்தைப் பொருத்தவரைக்கும் அது மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்தப் படத்தின் விழாவில் சமீபத்தில் வெளியான எல்லாப் படங்களின் வசூலையும் முறியடித்துவிட்டு பணமா, பாசமா வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டு இருக்கிறது என்றார் கேஎஸ். கோபாலகிருஷ்ணன்.
அந்தப் பேச்சை எம்ஜிஆர் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தியேட்டருல போய் பார்த்துட்டு வெளியே வந்து பார்க்கிறார். அவரோட கார் அப்பளம் மாதிரி நொறுக்கப்பட்டு இருக்கு. கேஎஸ்.கோபாலகிருஷ்ணனின் பேச்சு எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிக்கச் செய்துவிட்டது.
அது மிகப்பெரிய ஆத்திரத்தைக் கிளப்பி இருக்குன்னு தெரிந்ததும் மிகுந்த பாதுகாப்போடு அவர் தங்கி இருந்த இடத்துக்கு கேஎஸ்.கோபாலகிருஷ்ணனை அந்தத் திரையரங்கு உரிமையாளர்கள் அழைத்துச் செல்கின்றனர்.
ஒருவாரத்துக்கு வெளியில தலை காட்டாதீர்கள் என்றும் அவருக்கு அறிவுரை கூறினார்கள். இந்தப் பிரச்சனையில் எம்ஜிஆர் ரசிகர்களை அமைதிப்படுத்தணும்னா எம்ஜிஆர் படத்தை நீங்க இயக்கப்போறீங்கன்னு ஒரு செய்தியை வெளியிட்டால்தான் நல்லது. அப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டார் கேஎஸ். கோபாலகிருஷ்ணன்.மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.