சீனாவில் எம்ஜிஆர் செய்த தரமான சம்பவம்... நெகிழ்ச்சியுடன் சொன்ன ரசிகர்

by சிவா |
சீனாவில் எம்ஜிஆர் செய்த தரமான சம்பவம்... நெகிழ்ச்சியுடன் சொன்ன ரசிகர்
X

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாமே நல்ல கருத்துகள் தான் சொல்லப்பட்டு இருக்கும். அதே போல அவரது படங்கள் எளிதில் மக்களைச் சென்றடைய காரணம் என்னன்னா எந்தவிதமான இரட்டை அர்த்தம் தரும் ஆபாச டயலாக்குகளோ, காட்சிகளோ இடம்பெறாது. அது மட்டும் அல்லாமல் அவரது படங்களில் இளகிய மனம் கொண்டவராக பிறருக்கு கஷ்டம்னு வந்தா உதவுபவராக எம்ஜிஆர் நடித்து இருப்பார்.

நிஜ ஹீரோ: புகைப்பிடிப்பது உள்ளிட்ட போதைக்காட்சிகள் இடம்பெறாது. எம்ஜிஆரைப் பொருத்தவரை படத்தில் மட்டும் ஹீரோ அல்ல. நிஜத்திலும்தான் என்று விவரிக்கிறது இந்த சம்பவம். வாங்க அப்படி என்னதான் செய்தாருன்னு பார்க்கலாம்.

எம்ஜிஆர்: ஒரே வானம் ஒரே பூமி என்ற படத்திற்காக படப்பிடிப்புக் குழுவினர் பாங்காக் சென்றுள்ளார்கள். அங்கு ஒரு நபர் இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றதும் அருகில் வந்து பேச்சு கொடுத்தார். எம்ஜிஆர் குறித்து அவர் படப்பிடிப்புக் குழுவினரிடம் சொன்ன தகவல் ஆச்சரியம் தந்தது. என்ன சொல்கிறார்னு பாருங்க.

ஒருமுறை எம்ஜிஆர் படத்துக்கு சீனாவில் சூட்டிங் நடந்தது. அப்போது அங்கு ஏராளமான சீனப்படங்களின் சூட்டிங்கும் நடந்தன. எம்ஜிஆர் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாதுன்னு தனது படப்பிடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார்.

சண்டைக்காட்சியில் சீனக்கலைஞர் பலி: அப்போது ஒரு சீனப்படப்பிடிப்பில் சண்டைக்காட்சிக்கான சூட்டிங் மும்முரமாக நடந்தது. ஹெலிகாப்டரில் நடக்கும் சண்டைக்காட்சி அது. அதனால் உயிரைப் பணயம் வைத்து சண்டைக்கலைஞர்கள் நடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

அஞ்சலி: விஷயத்தைக் கேள்விப்பட்டதும் எம்ஜிஆர் உடனடியாக தனது குழுவினருடன் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் அங்கு நடந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் யாரும் இதைக் கவனித்தும் யாரும் வரவில்லை.

ஆனால் எம்ஜிஆர் பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பையே ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். அது சாதாரண விஷயம் அல்ல. எம்ஜிஆரின் இந்த மனிதாபிமானம்தான் அவரை இன்றளவும் நமமை பேச வைக்கின்றன.

Next Story