படத்த பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டிய ரசிகர்கள்.. தேம்பி அழுத இயக்குனர்.. ஆனால் சூப்பர் ஹிட்டாச்சே

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சேரன். இயக்குனராக நடிகராக என இரண்டிலுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்திருக்கிறது. ஆட்டோகிராப் படம் யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றி திரைப்படம். இந்த படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்து அதன் பிறகு தான் சேரன் ஹீரோவாக நடித்தார்.
தற்போது மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் சேரன். இந்த நிலையில் முரளியை வைத்து அவர் எடுத்த பொற்காலம் திரைப்படம் எப்படி வெற்றி பெற்றது என்பதை அந்த படத்தின் தயாரிப்பாளர் காஜா முகைதீன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி அந்த படத்தை காஜா முஹைதீன், சேரன் உட்பட படத்தை பார்க்க சென்று இருக்கிறார்கள்.
அப்போது பத்து சீன் முடிந்து பதினோராவது சீனில் ரசிகர்கள் அந்தப் படத்தை பார்த்துவிட்டு கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்திருக்கிறார்கள். உடனே சேரன் வெளியே வந்து தேம்பி தேம்பி அழுதாராம். அதன் பிறகு முழு படமும் முடிந்து வெளியே வரும்போது சேரன் காஜா முஹைதீன் இவர்கள் கண் முன்னாடியே ஒரு ரசிகர் இன்னொரு ரசிகரை பார்த்து ஏண்டா நல்ல நாள் அதுவும் இந்த படத்துக்கா என்னை கூட்டிட்டு வருவ என சொல்லி அடித்திருக்கிறார். அதுவரை இவர்கள் யாரென்று அந்த ரசிகர்களுக்கு தெரியாது.
ஏனெனில் சேரன் காஜா முகயதீன் அப்போது சினிமாவில் அறிமுகமான நேரம். அதன் பிறகு வீட்டுக்கு வந்து காஜா முஹைதீன் அவருடைய செல்போனை ஆப் செய்து விட்டாராம். ஏனெனில் விநியோகஸ்தர்கள் என அடுத்தடுத்து ஃபோன் செய்து நம்மளை தொந்தரவு பண்ணுவார்கள் என நினைத்து இரண்டு நாள் போனை ஆஃப் செய்து விட்டாராம். திங்கள்கிழமை காலையில் அவர் வீட்டுக்கு அவருடைய உதவியாளர் வந்து அலுவலகத்தில் விநியோகஸ்தர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என சொல்ல அதற்கு காஜா முஹைதீன் 12 மணிக்கு நான் வருகிறேனு சொல்லு.
வந்ததும் அவர்களுக்கு தேவையான பணத்தை செட்டில் செய்து விடுகிறேன் என்றும் சொல்லிவிடு எனக் கூறியிருக்கிறார். ஆனால் அந்த உதவியாளர் இல்ல சார் அனைவருமே மாலை ஸ்வீட் என உங்களை பார்க்க சந்தோஷமாக வந்திருக்கிறார்கள் என கூறி இருக்கிறார். உடனே காஜா முகைதீன் அவருடைய அலுவலகத்திற்குப் போக அனைத்து விநியோகஸ்தர்களும் படத்தை பார்த்து படம் சூப்பர் ஹிட் .நல்ல ஒரு வெற்றி என சொல்லி அவருக்கு மாலை மற்றும் ஸ்வீட் கொடுத்து உற்சாகப்படுத்தி இருக்கின்றனர் .அதன் பிறகு தான் இவருக்கே தெரியுமாம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று .இதை ஒரு பேட்டியில் காஜா முஹைதீன் கூறினார்.