அப்பாவை விட பிரபுவுக்கு எம்ஜிஆர் இவ்வளவு முக்கியமா? முதல் படத்தில் நடந்த சம்பவம்

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்:
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் சமீபகாலமாக அதிகமாகவே இருந்து வருகிறது. இது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பிறமொழி சினிமாக்களிலும் அதிகமாகவே காணப்படுகின்றன. அதில் சில வாரிசு நடிகர்கள் கோலோச்சி வருகின்றனர். சில நடிகர்களால் அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் இன்னும் போராடிக் கொண்டேதான் இருக்கின்றனர்.
அந்த வகையில் பாக்யராஜ் மகன் சாந்தனு, பிரபு மகன் விக்ரம் பிரபு, பாண்டியராஜன் மகன் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு காலத்தில் சிவாஜி எப்பேற்பட்ட ஆளுமையாக இருந்தார் என அனைவருக்குமே தெரிந்திருக்கும். நடிப்பு பல்கலைக்கழகமாக கொண்டாடப்பட்டவர் சிவாஜி. அவருடைய வாரிசான பிரபுவும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு திரைத்துறைக்கு வந்தார்.
sivaji
முன்னணி நடிகராக பிரபு:
அப்பாவை போல பிரபுவும் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் பிரபு. 90களில் காலத்தில் முன்னணி நடிகராக அறியப்பட்டார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரபு குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக பிரபுவை படங்களில் பார்க்க முடிவதில்லை. விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிரபுவின் முதல் படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பிரபுவின் முதல் படம் சங்கிலி. இந்தப் படத்தின் படப்பிற்காக எல்லாரும் புறப்பட தயாரானார்கள். அப்பொழுது பிரபு சிவாஜியிடம் ‘அப்பா நீங்கள் முதலில் ஸ்டூடியோவிற்கு செல்லுங்கள். சிறிது நேரம் கழித்து நான் வருகிறேன்’ என்று கூறினாராம். அதற்கு சிவாஜி ‘டேய், நீயும் நானும் நடிக்க வேண்டிய காட்சி இன்று படமாக்கப்படுகிறது. எப்பொழுது வருவ’ என்று கேட்டிருக்கிறார்.
எம்ஜிஆர் மீது வைத்திருந்த மரியாதை:
அதற்கு பிரபு ‘ நீங்கள் ஸ்டூடியோவிற்கு போவதற்கு முன்பே நான் வந்து விடுவேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். பிரபு சொன்னதை போல் ஸ்டூடியோவிற்கு பிரபு வர ‘எங்கடா போயிட்டு வந்த’ என சிவாஜி கேட்டிருக்கிறார். அதற்கு பிரபு ‘ அது ஒன்றும் இல்லை. முதன் முதலில் சினிமாவில் நடிக்கப் போகிறேன். அதனால்தான் ராமாபுரம் சென்று பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன்’ என எம்ஜிஆரை பார்த்து வந்ததன் காரணத்தை கூறியிருக்கிறார் பிரபு.
mgr
இதிலிருந்தே தன் அப்பாவான சிவாஜிக்கு இணையாகத்தான் எம்ஜிஆரையும் பிரபு பார்த்துவந்திருக்கிறார். அதுவும் சின்ன வயதிலிருந்தே எம்ஜிஆரை பிரபு பெரியப்பா என்றுதான் அழைப்பார். அப்படித்தான் ஒரே குடும்பமாக எம்ஜிஆரும் சிவாஜியும் பழகி வந்திருக்கின்றனர். அவருடைய ஆசிர்வாதம் தான் பின்னாளில் பிரபு சினிமாவில் கொடி கட்டி பறக்க காரணமாக அமைந்தது.