பலவருடங்களுக்கு முன்பே ரஜினி கொடுத்த அட்வைஸ்!.. மொத்தமாக மாறிப்போன அஜித்!...

Ajithkumar: சினிமாவில் எல்லோரும் ஒரு ஃபார்முலாவை பின்பற்றுவார்கள். இது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இமேஜ் முக்கியம் என கருதிய எம்.ஜி.ஆர் அந்த இமேஜை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். அதனால்தான் தனது படங்களில் மது அருந்துவது போலவே, சிகரெட் பிடிப்பது போலவோ காட்சிகளில் நடிக்கமாட்டார்.
நிஜ வாழ்விலும் அதையே கடைபிடித்தார். நடிகர் சிவக்குமாரும் அப்படித்தான். உடற்பயிற்சி, யோகா, ஆன்மிகம், கெட்ட பழக்கங்கள் இல்லாதது என இமேஜை வளர்த்துக்கொண்டார். அவரை பின் தொடர்ந்து அவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் அப்படி ஒரு இமேஜ் இருக்கிறது.
பல நடிகர்களுக்கு சினிமாவில் ஒரு இமேஜ் இருக்கும். நிஜ வாழ்வில் வேறு இமேஜ் இருக்கும். நடிகர் நம்பியார் சினிமாவில் வில்லத்தனம் செய்வார். ஆனால், நிஜ வாழ்வில் அசைவம் கூட சாப்பிடாத ஒரு ஆன்மிகவாதி அவர். 80களில் நடிகர் ரஜினிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாகவே இருந்தது. மது அருந்துவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அவருக்கென தனி அறையே இருந்தது.
பொதுவாக நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா, சக்சஸ் பார்ட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொள்வார்கள். அஜித் கூட அப்படித்தான் இருந்தார். அசல் படம் வரை அஜித் இதை செய்து வந்தார். ஆனால், அந்த படத்திற்கு பின் அவர் மொத்தமாக மாறினார்.
ரசிகர்கள் சந்திப்பு, செய்தியாளர்கள் சந்திப்பு, புரமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என எதற்கும் வரமாட்டார். முன்பெல்லாம் ஊடகங்களிடமும், பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் சினிமா செய்தியாளர்களிடமும் நேரம் ஒதுக்கி பேசுவார். இப்போது எதையும் அவர் செய்வதில்லை. ரசிகன் தன்னை திரையில் பார்த்தால் மட்டும் போதும் என்கிற முடிவில் அவர் இருக்கிறார்.
இந்நிலையில், சினிமா செய்தியாளரான வலைப்பேச்சி அந்தணன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அசல் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது அஜித்திடம் அவர் 2 மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவர் கொடுத்த அறிவுரைதான் அஜித்தை மொத்தமாக மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். யாரையும் சந்திக்காதே.. யாரிடமும் பேசாதே.. அதுதான் உன் வளர்ச்சிக்கு உதவும்’ என அவர் சொல்லியிருக்க வேண்டும்’ என நம்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
அஜித்தின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தபோது ‘என்னுடைய பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள். ஹிட் அடிக்கும். உங்களின் மார்க்கெட் நிலையும் மாறும்’ என அஜித்திடம் சொன்னதே ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.