ஒன்பதே நாளில் ரஜினி நடித்துக் கொடுத்த படம்... வில்லனா நடிச்சாலும் படம் சும்மா அள்ளுதே..!

by sankaran v |
ஒன்பதே நாளில் ரஜினி நடித்துக் கொடுத்த படம்... வில்லனா நடிச்சாலும் படம் சும்மா அள்ளுதே..!
X

ரஜினிகாந்த் இப்போ எல்லாம் 1 படத்துல நடிக்க 100 நாள், 200நாள்னு கால்ஷீட் கொடுக்குறாரு. 90களில் 30 நாள், 60 நாள்னு கொடுத்தாரு. குரு சிஷ்யன் படத்துக்கு 18 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து முடிச்சிக் கொடுத்துருக்காரு.

இதுக்கெல்லாம் ஒருபடி மேல வெறும் 9 நாள்கள் மட்டுமே தேதி கொடுத்து அதுல ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடத்தில் நடித்து அதுவும் சூப்பர்ஹிட் ஆகியிருக்கு. அது என்ன சம்பவம்னு பார்க்கலாமா...

வி.சி.குகநாதன்: 70களின் இறுதியில் ரஜினி பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்துல டைரக்டர் வி.சி.குகநாதன் மாங்குடி மைனர் என்ற படத்தை எடுக்க முயற்சி பண்றாரு. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் கிடைச்சதும் கதை, திரைக்கதை எழுதி நடிகர்களைத் தேர்வு செய்கிறார்.

ரஜினி ரொம்ப பிசி: ஹீரோவாக விஜயகுமாரைத் தேர்வு செய்துவிட்டார். ஆனா வில்லனா நடிக்கணும்னா அது வெயிட்டான கேரக்டர். நல்ல நடிகர் வேணும்னு நினைத்து சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் பேசுகிறார்.

அந்த சமயத்துல ரஜினி ரொம்பவே பிசி. இரவு பகலா நடிச்சிக்கிட்டு இருந்தார். அதனால டைரக்டர்கிட்ட 'எங்கிட்ட இப்போ கால்ஷீட்டுக்கான தேதி இல்ல. 2 வருஷம் கழிச்சித்தான் தேதி கிடைக்கும். அப்போ எடுக்குறீங்களா..'ன்னு கேட்டாராம்.

குகநாதனோ 'இல்ல. நான் ஏற்கனவே கன்பார்ம் பண்ணிட்டேன். அதுல எல்லாரையும் செலக்ட் பண்ணிட்டேன். படத்தை உடனடியா ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுல வில்லன் கேரக்டர் ரொம்ப அழுத்தமானது. நீங்க நடிச்சா தான் நல்லாருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

9 நாள்கள்: அப்போ ரஜினியோ 'நான் ஆன்மிகப் பயணம் போவதற்காக அதுக்கு முன்னாடி 9 நாள்கள் என்னோட கால்ஷீட் தேதியில் இருந்து ஒரு கேப் வச்சிருக்கேன். அந்த 9 நாள்களுக்குள் எனக்கான சீனை எடுக்க முடியுமா'ன்னு கேட்டுள்ளார். 'அதுக்கு நான் 100 சதவீத ஒத்துழைப்பு தரத் தயார்' என்று சொன்னதும் டைரக்டர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கிட்டு செய்தார்.

இந்திப் பட ரீமேக்: அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டு ரஜினியோட காட்சிகளை எடுக்கிறார். அப்போ ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை ரஜினி நடித்துக் கொடுத்தாராம். அந்தக் காலகட்டத்தில் இது பெரிய சாதனையாகவே பேசப்பட்டது. இந்தப் படம் அப்போது சூப்பர்ஹிட் ஆனது. குறிப்பா ரஜினியோட நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளானது. இது இந்திப் படத்தின் ரீமேக்.

மாங்குடி மைனர்: 1978ல் வி.சி.குகநாதன் இயக்கிய படம் மாங்குடி மைனர். விஜயகுமார், ரஜினி, ஸ்ரீபிரியா, எம்.என்.ராஜம், சகுந்தலா, எஸ்வி.ராமதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். படத்தின் டயலாக்குகள் ரொம்பவே கிளாஸாக இருந்ததால் ரசிகர்களுக்கு ரஜினி பேசும் டயலாக்குகள் எல்லாம் பிடித்துப் போனது. ஒரு காட்சியில் ராமனை விட ராவணனன்தான் ஜென்டில்மேன்னு சொல்வது அப்ளாஸை அள்ளியது.

Next Story