இந்த மாதிரி ஒரு படத்தில் நான் நடிக்கலயே!.. கமல் படத்தை பார்த்து தூங்காமல் இருந்த சூப்பர்ஸ்டார்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kamalhaasan: 4 வயது சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய இந்த பயணம் இப்போது வரை நீடிக்கிறது. தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் சகலகலா வல்லவனாக இருப்பவர் இவர். துவக்கம் முதலே பாலச்சந்தர் போன்ற திறமையான இயக்குனர்களிடம் சினிமா கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

கமர்ஷியல், மசாலா படங்களை ரசிக்கும் சினிமா ரசிகர்களை மாற்று சினிமாவுக்கு மடைமாற்றும் வேலையை கமல் எப்போதே துவங்கிவிட்டார். அதில் பெரும்பாலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஏனெனில், அவரின் ராஜபார்வை, குருதிப்புனல், குணா, ஆளவந்தான், ஹேராம் போன்ற படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனாலும், கமல் புதிய முயற்சிகளை எடுப்பதிலிருந்து பின் வாங்குவதில்லை.

கமல் நடித்த பல சிறந்த படங்களில் சிப்பிக்குள் முத்து என்கிற படமும் ஒன்று. தெலுங்கில் இப்படம் ஸ்வாதி முத்யம் என்கிற பெயரில் வெளியானது. 1986ம் வருடம் வெளிவந்த இந்த படத்தை கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார். தெலுங்கில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் இவர். கமலை வைத்து சலங்கை ஒலி படத்தை இயக்கியவரும் இவர்தான். பல படங்களுக்காக தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். பல தமிழ் படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

இவரின் இயக்கத்தில் கமல் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கமல், ராதிகா இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். கமல் மனநிலை பாதிக்கப்பட்ட வேடத்தில் நடித்திருந்தார். தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானாலும் இது ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ‘இத்தனை வருடங்கள் சினிமாவில் அடித்தும் இது போல ஒரு படத்தில் நாம் நடிக்கவில்லையே’ என மிகவும் ஃபீல் செய்திருக்கிறார். அதோடு, 2 நாட்கள் சரியாக தூங்காமல் ஷூட்டிங்கில் நடிக்க முடியாமல் இருந்திருக்கிறார். இந்த தகவலை இயக்குனர் கே.விஸ்வநாதனே ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment