வெங்கடேஷ் பிரபு தனுஷாக மாறியது இப்படித்தான்!.. அட கமல்தான் இதற்கு காரணமா?!....

Actor Dhanush: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி கடந்த 23 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என அண்னன் செல்வராகவன் இயக்கத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்து பெயர் வாங்கினார்.
கமர்ஷியல் மற்றும் கலைப்படங்கள்: அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் இடையிடையே நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் திரைப்படங்களிலும் நடிப்பது தனுஷின் வழக்கம். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் என வித்தியாசங்கள் காட்டியவர்.
தேசிய விருது: இதில், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். எதிர் நீச்சல், காக்கா முட்டை, காக்கி சட்டை, நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடிக்கும் பேன் இண்டியா நடிகராக மாறியிருக்கிறார்.
சினிமாவில் இயக்கம்: மேலும், பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இட்லி கடை படத்திற்கு முன்பே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தையும் தனுஷ் இயக்கி முடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் வழக்கமான காதல் கதையை தனது ஸ்டைலில் சொல்லி இருக்கிறார் தனுஷ். இந்த படத்தை பார்த்த இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாரிசெல்வராஜ் போன்றவர்கள் இந்த படத்தை பாராட்டியிருக்கிறார்கள்.
தனுஷ் பெயர் காரணம்: தனுஷின் நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. அவர் எப்படி தனுஷ் என்கிற பெயரை தேந்தெடுத்தார் என தெரியுமா?. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானபோது படத்தின் டைட்டிலில் வெங்கடேஷ் பிரபு என்கிற பெயர் வேண்டாம். ஸ்டேஜ் நேம் போல ஒரு பெயரை வைக்கலாம் என பேசியிருக்கிறார்கள்.
குருதிப்புனல் படத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் நக்சலைட் கும்பலை பிடிக்க கமலும், அர்ஜூனும் ரகசியமாக செய்யும் ஆபரேஷனுக்கு தனுஷ் என பெயர் வைத்திருப்பார்கள். அதாவது ‘ஆபரேஷன் தனுஷ்’. இந்த படத்தின் பரம ரசிகர் வெங்கடேஷ் பிரபு. எனவே, அப்பாவிடம் சென்று எனக்கு ‘தனுஷ்’ என்றே பெயர் வையுங்கள் என சொல்லியிருக்கிறார். இப்படித்தான் வெங்கடேஷ் பிரபு தனுஷாக மாறியிருக்கிறார்.